பாக்யராஜுக்கு ஏனிந்த வேலை?

கைய புடிச்சு இழுத்தாரு…. என்று காங்கிரஸ் எம்பி யின் மானத்தை இன்ஸ்ட்டால்மென்ட்டில் ஏலம் போட்ட ஸ்வேதா மேனனை யாருக்கும் தெரியாமலிருக்காது. இத்தனைக்கும் ஸ்வேதாவுக்கு இருக்கும் இமேஜ் தகர டப்பா லெவலுக்கு கூட இல்லை மலையாளத்தில். ஒரு கவர்ச்சி நடிகை என்கிற அளவுக்கே வைக்கப்பட்டிருக்கும் இவரை ‘காங்கிரஸ் எம்.பி கைய புடிச்சு இழுக்காம என்ன செய்வாராம்?’ என்று அவரது கட்சிக்காரர்கள் திருப்பி கேட்டதிலும் தப்பில்லை. ஒருவழியாக பிரச்சனை ஓய்ந்த நிலையில், இனிமேலும் இவரை வச்சு நிம்மதியாக படம் எடுக்க முடியுமா என்கிற டவுட் வந்திருக்கிறதாம் அங்கே. தப்பி தவறி கை பட்டாலும், ஊரை கூட்டி ஒப்பாரி வைத்தால் என்னாவது என்கிற அச்ச உணர்வுதான் இதற்கெல்லாம் காரணம்.

ஒரு ஷட்டரை குளோஸ் பண்ணினால் இன்னொரு ஷட்டர் திறக்கும் என்பது லிங்குசாமியின் பைட் சீன் ரகசியம் மட்டுமல்ல, பொதுவான சித்தாந்தமும் கூட. இப்போது மெல்ல தமிழ்சினிமா பக்கம் தன் பார்வையை திருப்பியிருக்கிறார் இந்த ஸ்வேதாமேனன். வெகுநாள் கழித்து திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் இயக்கவிருக்கும் துணை முதல்வர் படத்தில் ஸ்வேதா மேனனுக்கு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இவர் நடித்த பல படங்களை பிட்டு பட ரேஞ்சுக்கு ஊருக்கு வெளியே ஓட்டிக் கொண்டிருக்கும் தியேட்டர்காரர்களும், இதை கண்டு களிக்கும் ரசிகர்களும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஏன்? கே.பாக்யராஜ் ரொம்ப நாள் கழிச்சு கர்ணம் போட்டு ஒரு படத்தை பிடிச்சிருக்கார். எதுக்கு இந்தம்மாவை போட்டு பிரச்சனையை வாங்கிக்கிறார்? இதுதான் அவர்களின் அன்புகலந்த ஆற்றாமை.

ஹ்ம்ம்ம்ம்… அவருக்குதான் என்ன கட்டாயமோ?

Shweta Menon has been roped in to play in Bhagyaraj’s film

After a long hiatus director Bhagyaraj has returned to direction. He will be wielding the megaphone for the film titled Thunai Mudhalvar. It will certainly gladden the hearts of his fans and family audience. Shweta Menon the controversial star from Malayalam film industry – who made a dramatic complaint against the Congress MP only to be taken back after his apology – has been roped in to play the important role in the film. While she is not a popular actress in Malayalam films, her popularity sank further after the controversy. It is heard that Malayalam film makers are hesitant to cast her in films fearing unnecessary problems. While it is so, roping in of Shweta Menon has raised the eyebrows here with film makers and distributors are wondering what was the compulsion for Bhagyaraj to cast her in his film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எதுக்கெல்லாம் டென்ஷன் ஆவுறாங்கப்பா…

குடை மேல குடைய வச்சாலும் குளிக்கிறளவுக்கு மழையடிக்குதேன்னு சந்தோஷப்படுற ரெண்டே நடிகைகள் இப்போ லட்சுமிமேனனும், ஸ்ரீதிவ்யாவும்தான். ஏகப்பட்ட கண்டிஷன்களுக்கு பிறகுதான் கால்ஷீட்டே கொடுக்கிறார்களாம். இருந்தாலும் இவர்கள் முதலில்...

Close