பிட்டு படத்தில் அமலாபால்….?

பிட்டு படத்தில் அமலாபால்….? இந்த தலைப்பு அவரது கோடானு கோடி ரசிகர்களின் கண்களில் ஒரு மெர்க்குரி பல்பை எரியவிட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எங்கே எங்கே என்று தேடி இன்டர்நெட்டில் தலையை விட்டு துழாவும் அன்பு சகோதர்களுக்கு… நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டாம். கோயம்பேடு பக்கமாக ஒரு ஜென்ட்டில் வாக் போனால் அந்த பிட்டு பட போஸ்டர்களை கண்ணார காணலாம்.

வேறொன்றுமில்லை… சிந்து சமவெளி படத்தின் தலைப்பை சிந்து என்று சுருக்கிவிட்டார்கள் அந்த தியேட்டர்காரர்கள். சிந்து என்று தலைப்பிடப்பட்ட போஸ்டரில், சற்றே கண்கள் செருக அமலாபால் ஏங்கிக் கொண்டிருக்க, படத்தில் நடித்திருக்கும் மற்றவர்களின் தலையெல்லாம் சின்ன சின்ன பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களாக மங்கலாக இருக்கிறது.

இவற்றை வைத்துதான் அட… இது சிந்துசமவெளி படமாச்சே என்கிற உணர்வே நமக்கு வந்தது. தியேட்டர் பக்கம் கூட்டம் கட்டி ஏறுகிறதாம். நல்ல டெக்னிக்…

Marketing technique for Amala Paul’s film

The title of Amala Paul’s film Sindhu Samaveli has been shortened as Sindhu in the wall posters with Amala Paul photo (a longing expressive face of Amala) given the prominence and the rest of the actors given little or no relevance at all. This has been done by the theatre showing the film, thus confusing the audience may be it is a dubbed new release of the actress. It is heard that the theatre draws good crowd for the film. Innovative technique indeed!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஆரம்பம்’ ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ நிறுவனங்களில் வருமான வரி சோதனை!

தீபாவளி வசூல் மத்தாப்பூவாக ஜொலிக்கும் நேரம் இது. தயாரிப்பாளர்கள் சினிமாவில் இறைத்த பணத்தையெல்லாம் ரிலீஸ் நேரத்தில் வட்டியும் முதலுமாக வசூல் செய்யும் நேரம் இது. இந்த நேரத்தில்தான்...

Close