‘பிரதர்ஸ்’ சேர்ந்து நடிப்பாங்களா? மணிரத்னம் எடுக்கும் புதுமுயற்சி…
யாரு கல்லெறிஞ்சாலும் மாங்கா விழறதில்ல. அதற்கென ஒரு குறிபார்க்கும் சாமர்த்தியம் வேணும். அப்படி குறிபார்க்க கிளம்பியிருக்கிறார் மணிரத்னம். மாங்கா யாரு? தமிழ்சினிமாவின் டாப் கிளாஸ் சகோதரர்கள்தான்!
எவ்ளோ துட்டு வேணும்னாலும் வாங்கிக்கோங்க. ஒரு படத்துல சேர்ந்து நடிச்சு கொடுத்தா போதும். ஏழேழு தலைமுறைக்கு சொத்து சேர்த்துட்டு ஒதுங்கிடுவேன் என்று வெளிப்படையாகவே கேட்டும் பார்த்துவிட்டார்கள் அந்த சகோதரர்களிடம். அதுக்கெல்லாம் ஒரு நல்ல கதை வேணும். நல்ல கதை இருந்தா மட்டும் போதாது. நல்ல இயக்குனர் வேணும். நல்ல இயக்குனர் மட்டும் இருந்தா போதாது. ரெண்டு பேருக்கும் நல்ல நேரம் ஒண்ணா வந்து வொர்க்கவுட் ஆகணும். எல்லாம் கூடி வரும்போது சொல்லியனுப்புறோம். இப்போதைக்கு கிளம்புங்க என்று சிரித்து மழுப்பியே முக்கியமான தயாரிப்பாளர்களை அனுப்பி வைத்த வரலாறு உண்டு இந்த பிரதர்ஸ் பேமிலிக்கு.
தற்போது இவர்களைதான் குறி வைத்திருக்கிறாராம் மணிரத்னம். கடந்த சில படங்களாகவோ இவரது மணி மகுடத்தில் ரத்தினங்கள் பறிபோய், குண்டுமணியை ஒட்ட வைத்திருக்கிறது விதி. இந்த நேரத்தில் இவர் அழைத்தால் அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? மணி என்கிற கிரேஸ் இந்தியா முழுக்க பரவிக் கிடக்கிறது. அதனால் கதை கேட்கும் படலம் வரைக்கும் மணியின் நம்பிக்கைக்கு மோசம் வராது என்று நம்பலாம்.
அதற்கப்புறம்? அது அவர் சொல்லும் கதையை பொறுத்தது. சரி, பிரதர்ஸ் யாருன்னு சொல்லிட வேண்டியதுதானே? இன்னுமா புரியவில்லை? சூர்யாவும் கார்த்தியும்தான்.
Aw, this was an extremely nice post. Taking the time and
actual effort to generate a superb article… but what can I say…
I procrastinate a lot and don’t manage to get anything done.
Here is my blog post – online firms