புட்டுகிச்சா… இல்லையா? – நல்லா பண்ணுனாங்கப்பா லவ்வு…!

சிம்பு – ஹன்சிகா லவ்வுக்கு குறுக்கே பகவதிபுரம் ரயில்வே கேட்டைவிட பலமான கேட் ஒன்று விழுந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கிறது. ஹன்சிகாவின் அம்மாவுக்கு மட்டுமே கட்டி சர்க்கரையாக இனிக்கும் இந்த விஷயம் சிம்புவுக்கோ, ஹன்சிகாவுக்கோ எப்படியிருந்தாலும் இனிக்கப் போவதில்லை.

நடுவில் வந்த ஆன்ட்ரியா, சிம்புவின் மனசுக்குள் விழுந்து இதயத்திற்குள் நுழைந்துவிட்டாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் எவ்வித பலனும் தரப்போவதில்லை இன்டஸ்ரிக்கு. இதுவே ஹன்சிகா மேட்டர் என்றால், விழுந்தடித்துக் கொண்டு அலசுகிற கட்டாயம் இந்த கோடம்பாக்கத்திற்கு உண்டு. ஹன்சிகாவை விட ஆன்ட்ரியா அப்படியொன்றும் ஆதார ஸ்ருதி இல்லை மார்க்கெட்டுக்கு. அதனால்தான் ஆன்ட்ரியா விஷயத்தில் இந்த அலட்சியம். எப்பவுமே புளிய மரத்து கிளையாக இருந்தாலும் அதன் உச்சி கிளையை பிடித்து உலுக்குவதில்தான் சிம்புவுக்கு விருப்பம். அதை ஒரு சவாலாகவும் நினைத்து செய்வார் அவர். அவரது முதல் காதலில் இருந்து லேட்டஸ்டாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட நயன்தாரா காதல் வரைக்கும் இதுதான் சிம்புவின் லாஜிக். மார்க்கெட்டில் தயிர்சாத லெவலில் இருக்கும் ஆன்ட்ரியாவுக்காக அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவும் போவதில்லை.

பிறகெப்படி இப்படியொரு கசமுசா? வேறொன்றுமில்லை, விடிவி கணேஷ் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தின் பிசினஸ் துவங்கப்படுகிற நேரமாம் இது. சந்தானத்தின் லெக் பாயின்ட் சற்றே ஆட்டம் கண்டிருப்பதாலும், படத்தின் ஒரே அட்ராக்ஷன் சிம்பு என்பதாலும் அவரை பற்றி ஊர் உலகத்தை பேச வைக்க வேண்டுமல்லவா? அதற்கான டெக்னிக்தானாம் இது. எங்கேயோ சொல்லி எப்படியோ கிளப்பிவிடப்பட்ட இந்த விஷயத்தில் ஹன்சிகாவின் கருத்துகள் வெளிவரும் வரை, சிம்புவையும் ஆன்ட்ரியாவையும் ஹன்சிகாவையும் உருட்டிக் கொண்டேயிருக்கும் மீடியா.

அது இருந்தால் எல்லா பிசினசும் ஒஹோதான்… கணேஷின் கணக்கு சரிதான் என்கிறார்கள் இங்கே. இவங்க லவ்வுல ஊர் குடுமியெல்லாம் சேர்ந்து ஆடுதே, அதுதான் ஒரே நகைஃபாச்சுஃபையிங்…

Simbu-Andrea chemistry a strong talking point in Kollywood

Andrea was a surprise addition in VTVGanesh’s Ingae Enna Solludhu which has Ganesh and Santhanam doing the lead roles. Simbu was roped in to do a cameo initially, however, his character was strengthened, may be due to Santhanam’s turbulent position. When an actor of Simbu’s calibre is doing an important role, VTV Ganesh mercurial brain suggested casting a pair for Simbu. This made him to cast Andrea opposite to Simbu. The chemistry between Simbu and Andrea has become talk of the town in Kollywood. It is also said in the Kollywood circle that the ‘chemistry talk’ is an intentional one for the purpose of gather publicity for the film, by Ganesh.

Well! Ganesh in mythology had indeed helped his brother Muruga in his love affair with Valli. We hope that this publicity stunt would not damage the ‘love’ of Simbu with his sweet heart Hansika.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மிஷ்கின் ஆரம்பித்து வைத்த சண்டை, – கிலி பிடித்தாடும் டெலி உலகம்!

  ஓரமா படுத்திருந்தவங்க மேலேயும் லாரி ஏறிட்டு போனா என்னாகும்? அப்படிதான் ஆகியிருக்கிறது மிஷ்கின் பேச்சினால் வந்த வம்பு சண்டை. சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி துவக்கவிழா...

Close