மலையாள நடிகரை மணந்தார் ராட்டினம் சுவாதி

ராட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுவாதி. அதற்கப்புறம் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும், ஒன்றும் சொல்லும்படியாக அமையாததால் அவரது சினிமா விளைச்சலும் அதிகம் சொல்லும்படியாக இல்லை. இதற்கிடையில் இவருக்கும் ராட்டினம் ஹீரோ லகுபரனுக்கும் லவ் என்று கும்மாளம் போட்டார்கள் இங்கே. அதை உறுதி செய்யும் விதத்தில் மேலும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்தார்கள் இவர்கள்.

கட்டை வண்டியில போறவனுக்கு கார் மீது ஆசை. காரில் போறவனுக்கு பிளேன் மீது ஆசை என்கிறது மோக சித்தாந்தம். இவ்விருவரது சினிமா தொடர்பும் இந்த இரண்டாவது படத்தோடு ஸ்கீரின் குளோஸ் ஆனபின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நாலாபுறத்திலும் நல்ல வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார் சுவாதி.

மேற்படி தேடல்களில் நல்ல படம் கிடைத்ததோ இல்லையோ? நல்ல கணவர் கிடைத்தார். மலையாள படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அஜய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் சுவாதி. இந்த நல்ல விஷயத்தை காதும் காதும் வைத்தது போல அவர் செய்து முடித்திருப்பதுதான் பலரது கற்பனா சக்தியையும் தட்டிவிட்டிருக்கிறது. ஆளுக்கொரு கதையை கிளப்புவதற்குள், பதினாறும் பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துகிறோம்….

Swathi ties the knot with Malayalam actor

Swathi who debuted in Tamil with Rattinam, has tied the knot with Malayalam star Ajay in the hush-hush family affair.  She was said to be in love with Rattinam hero Kuberan earlier. She also paired with him again in a subsequent film which went without a trace. Subsequently, Swathi who could not make it big in Kollywood went to Telugu and Kannada industry and tried her hands. Meantime she fell in love with upcoming hero Ajay in Malayalam films. Both Ajay and Swathi married recently. We convey our best wishes and a Very Happy Married Life to the couple.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நானாயிருந்தா செஞ்சுருக்க மாட்டேன்… விமலை வியந்த பிரசன்னா!

விமல் பிரசன்னா சூரி ஓவியா அனன்யா இனியா உள்ளிட்ட கலகலப்பு பார்ட்டிகள் பலர் கைகோர்க்கும் படம் புலிவால். மலையாளத்தில் வெளிவந்த சப்பாகுரிஷ் படத்தைதான் தமிழுக்கு ஏற்றார் போல...

Close