மவனே… காணாப் போயிடுவே! – விஜய் சேதுபதியை எச்சரித்த இயக்குனர்

தலைப்புதான் இப்படி சுடு தண்ணி. மேட்டர் என்னவோ ஜில்தான்!

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடந்தது. தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.உதயகுமார், டைரக்டர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, ராம், இவர்களுடன் தெலுங்கின் முன்னணி ஹீரோ நானி மற்றும் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்கள். இந்த படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறாராம் நானி. அவரே அதில் நடித்து வெளியிடப் போகிறார். இந்த படத்தை நான் நேற்றுதான் பார்த்தேன். எனக்கு ஜாக்பாட்தான் என்றார் அவர்.

படக்குழுவினரை பாராட்டி பேசிய ஆர்.வி.உதயகுமார், பாடல் காட்சி ஒன்றை எடுப்பதற்காக இப்படத்தின் டைரக்டர் அருண்குமார் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டார். இந்த காலத்தில் ஒரு பாடல் காட்சிக்காக இன்னொரு டைரக்டரிடம் ஆலோசனை கேட்பதே பெரிய விஷயம். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியை நான் பல காலமாக பார்க்கிறேன். அப்படியே இருக்கார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகுது. அப்பவும் அப்படியே குணம் மாறாம இருக்கார் (என்று கூறிவிட்டு) ‘மவனே… நீ மட்டும மாறுன இங்கே உன்னை காணாமல் பண்ணிருவாங்க. பார்த்துக்க’ என்றார். அப்பவும் எவ்வித பதற்றமும் இல்லாமல் இந்த வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. அதற்கப்புறம் தமிழ்ப்பட ஹீரோக்களை வெளுத்து வாங்கினார் ஆர்.வி.உதயகுமார். இரண்டு படம் ஓடிருச்சுன்னா ஏதோ இந்த சினிமாவை கண்டுபிடிச்சதே நான்தான்ங்கிற மாதிரி சில ஹீரோக்கள் பேசுறாங்க. அவங்கதான் அப்படின்னா சில டைரக்டர்களும் அப்படிதான் பேசுறாங்க என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பேசும்போது, இந்த படத்துக்காக 127 கேன் பிலிம் யூஸ் பண்ணியிருக்கோம். ஏன்னா எமோஷன் மிஸ் ஆகிட கூடாதுங்கறதுக்காக திரும்ப திரும்ப எடுத்துருக்கோம் என்று கூறியது எதற்காக என்று தெரியவில்லை. பட்… குமுதா ஹேப்பிங்கிற மாதிரி கணேஷ் ஹேப்பி. ஏன்? படத்தை மூன்றரை கோடிக்கு புது யுகம் சேனலே வாங்கிவிட்டதுதான்.

Pannayarum Padminium audio launched

Vijay Sethupathi’s upcoming film Pannayarum Padminiyum’s audio was launched on 22nd Nov. in a glittering function, where luminaries of Kollywood present in full strength. Amongst those present were Producers’ Council President Kayaar, directors, Karu. Pazhaniappan, Seenu Ramasamy, RV Udhayakumar, and upcoming actor Nani from Tollywood.

Nani in his speech is very excited as he said he had bought the Telugu remaking rights of the film and he will don the role of Vijay in the Telugu remake. He also said that he had seen the film and hoped that it would become a hit.

Speaking on the occasion director RV Udhayakumar recalled how the film director Arun Kumar sought his suggestion in picturizing a song sequence in the film. He also cautioned the hero of the film Vijay Sethupathi to have his feet on the ground, like he has been doing now, despite giving hit after hit through his film. He also said that he felt sad when seeing some heroes and directors high headedness once their films get success.

Thanking the guests and the press, the producer Ganesh has said though lot of film rolls were used by the director has captured the emotions to the best extent possible in the film, it had cost him heavily.

The film’s satellite rights has already been acquired by Pudhu Yugam channel for a whopping sum, it is heard.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘சார்… இந்த ஓப்பன் போதுமா?’ நடிகை காட்டிய ஹிப்… டைரக்டர் இதயம் லொப் டொப்….

ஒரு சினிமா டைரக்டரை கேப்டன் ஆஃப் த ஷிப் என்கிறார்கள் இங்கே. சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் டைரக்டர் கஸாலி சொல்வதை கேட்டால், இவரை எபவ்டன் ஆஃப் த...

Close