மாறுவேடத்தில் வந்து ரகசியமாக ‘ வீரம் ’ படம் பார்த்த அஜீத்!

அஜீத் ஆஸ்திரேலியா போயிருந்தாரல்லவா? அவர் திரும்பி வந்துவிட்டார். அங்கு சென்றதை மட்டும் சிறப்பாக எழுதி தள்ளியவர்களுக்கு அவர் வந்த விபரம் தெரிந்ததா, இல்லையா,? தெரியவில்லை. ஆனால் சென்னைக்கு வந்த அஜீத் வந்த நாளிலிருந்தே ‘வீரம்’ படத்தை பார்க்க ஆவலாக இருந்தாராம்.

நேற்று முன் அவருக்கு பிரசாத் லேப் தியேட்டரில் படம் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவருக்காகவே காத்திருந்து இரவு சுமார் 11.30 மணியளவில் படம் திரையிடப்பட, சரக்கென காரிலிருந்து இறங்கிய அஜீத், யாரும் பார்ப்பதற்கு முன் தியேட்டருக்குள் நுழைந்துவிட்டாராம். மொட்டை தலையில் கருப்பு தொப்பி. முகத்தை மறைத்து கட்டப்பட்ட கர்சீப் என்று தனது வருகையை யாரும் கவனித்தாலும், சட்டென தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்கிற உணர்வுடன் அவர் நடந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

தியேட்டருக்குள் படம் ஓடுகிற நேரத்தில் கூட அவர் அந்த கர்சீப்பை அவிழ்க்கவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் அவருடன் இயக்குனரும், இன்னும் சிலரும் இருந்திருக்கிறார்கள்.

படம் முடிந்த பின் இயக்குனரை தோளில் தட்டி பாராட்டிவிட்டு விறுவிறுவென காரில் கிளம்பி போய்விட்டாராம். ரசிகர்களை பொறுத்தவரை அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவரது நிழல் மனிதர்களுக்கு… அண்ணாத்த சென்னையிலதாங்க இருக்காரு.

Ajith does a scoop to see his film Veeram

Ajith who had a family vacation to Australia and New Zealand, is expected to be back to Chennai on 9th Jan. i.e. today. But it appears he has already landed at Chennai two days earlier.

Couple of days ago, at about 11.30 pm he drove to Prasad Lab, under full cover of a head cap and a hankie to cover his face, so that no one can identify him. The reason is to watch his film Veeram in in-cognito.

Once he reached the preview theatre, he rushed inside and watched the film without divulging his identity, despite the director and other important members of the crew were with him.

After the film was over, he patted on the back of the director Siva congratulating him for his work, and drove back.

Read previous post:
பாராளுமன்றத்திற்கு வெளியே வேஷ்டியை கட்டியாவது அதில் படத்தை திரையிடுங்கள் ரவி….

சில படைப்புகளுக்கு மட்டும்தான் சட்டை காலராக கொத்தாக பற்றியிழுத்து ‘பார்றா இந்த அநியாயத்தை’ என்று கதறுகிற தைரியமிருக்கும். பாலாவின் படைப்புகளுக்கு இருக்கிற அதே தைரியத்தை தன் படைப்பிலும்...

Close