மோடியை சந்தித்தாரா வடிவேலு?

கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையே அதிரடிக்கிற செய்திதான் இது. பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி பெங்களூருக்கு வந்தாரல்லவா? அப்போது ரகசியமாக அவரை சந்தித்தாராம் வைகைப்புயல் வடிவேலு. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் தமிழக பா.ஜ.க வினர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வுக்காக தமிழகம் முழுவதும் சுற்றிவந்து பிரச்சாரம் செய்யப் போகிறாராம் இவர்.

ஒரு முறை வாயில் சூடுபட்டுக் கொண்ட தெனாலிராமனின் பூனை அதற்கப்புறம் பால் குண்டான் என்ன, வெள்ளை கலரில் எது இருந்தாலும் அது இருக்கிற திசைக்கை வராது என்பதுதான் இதுவரை நாம் கேட்ட கதைகள். ஆனால் வடிவேலு என்கிற பூனைக்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்றெல்லாம் இங்கே பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடிவேலு போன அதே நாளில் தமிழகத்தை சேர்ந்த பிரபல கிறிஸ்துவ பிரமுகர் ஒருவரும் சென்றிருந்தாராம். மோடி மத சார்ப்பற்றவர் என்பதை இவர் மூலம் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டு வருகிறார்களாம். அதனால்தான் இந்த சந்திப்பு. இவர் போன இடத்தில் வடிவேலுவை பார்க்க, இவரை அடிக்கடி டிவியில பார்த்துருக்கோம். கடலளவு கூட்டத்தை திரட்டி வச்சுகிட்டு ஏசுவே இறங்கி வா என்று அவருக்கே ஆர்டர் போடுகிற ஆளாச்சே என்றெல்லாம் வடிவேலு மிரண்டு போய் பார்க்க, எப்படியோ மோடி மீட்டிங் முடிந்து சென்னைக்கு திரும்பிவிட்டார்கள் இருவரும். அங்கு வடிவேலு வந்திருந்த ரகசியத்தை போட்டு உடைத்தவரும் அந்த கிறிஸ்துவ பிரமுகர்தானாம்.

இரண்டு மூணு வருஷமா நடிக்காமல் ஏற்பட்ட நஷ்டக்கணக்கை மோடி மீட்டிங்கில் வைத்து சரி பண்ணியிருப்பாரோ என்றும் சதாய்க்கிறார்கள் இங்கே. வதந்தியே வயித்தால போற அளவுக்கு பீதிய கிளப்புற புண்ணியாவானுங்களே… எல்லாம் நடக்கும்போது பார்த்துக்கலாம். வாயை மியூட் பண்ணுங்க!

Has Vadivelu met Narendra Modi?

Vadivelu who had a 3 years hiatus because of his indulgence in politics in the previous assembly election, is at it again, it seems. Kollywood is abuzz with the news that Vadivelu had met BJP Prime Ministerial candidate Narendra Modi at Bengaluru. It is said that local BJP wanted him to canvass for their party and hence persuaded him to meet Modi. A Christian propagator who conducts huge prayer meetings at Marina, too has met Modi at Bengaluru at the same time. He was also invited by local BJP leaders to meet Modi to canvas for their party in the coming elections. Both were surprised to see each other there. Soon after the meeting quietly they returned to Chennai. It is said that the news of Vadivelu meeting Modi was divulged by none other than the Christian propagator. 

Does Vadivelu think he needs another few years rest? Though he is making a comeback, his film is yet to be released and how people would accept him, is a big question yet to be answered.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெய் ஆகாஷ் முகத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து பார்க்கும் தைரியம் இருக்கிறதா?

எப்படியாவது தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட வேண்டும். தனக்கிருக்கும் இரண்டுங்கெட்டான் நடிகர் என்கிற இமேஜ் பெட்டியை உடைத்துக் கொண்டாவது வெளியே வந்துவிட வேண்டும் என்கிற வெறி ஜெய்...

Close