லட்சுமிமேனனை வணங்குகிறேன்… உணர்ச்சிவசப்பட்ட விஷால்!

‘நான் சிவப்பு மனிதன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அப்படத்தின் நாயகி லட்சுமிமேனன் வரவில்லை. வேறொன்றுமில்லை, பொண்ணுக்கு எக்ஸாம்! அவர் வரவில்லை என்றாலும் மொத்த ‘டாக்’கும் அவர் மீதுதான். விஷாலுக்கும் அவருக்கும் சம்திங் சம்திங் என்று மீடியாக்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த எமர்ஜென்ஸி நேரத்தில், இன்னும் கொஞ்சம் நெருப்பை அள்ளிப் போட்டார் விஷ்ணு. சமீபகாலமாக இவர் தன் பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றியிருக்கிறார். அந்த பாதி உரிமையில் விஷாலின் ப்ராப்பர்ட்டிக்கு அடி போட்டது போலிருந்தது அவர் பேச்சு.

‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் லட்சுமி மேனன் நடிக்கறதா சொன்னாங்க. சரி, விஷாலை பார்க்கப் போனா அப்படியே லட்சுமிமேனனையும் பார்த்துடலாம்னு நான் கணக்கு போட்டு விஷாலுக்கு எஸ்எம்எஸ் அனுப்புனேன். அவர், இன்னைக்கு எனக்கும் லட்சுமிமேனனுக்கும் நெருக்கமான சீன் இருக்கு. வராதேன்னுட்டாரு. சரி… இன்னொரு நாள் ட்ரை பண்ணலாம்னு எஸ்எம்எஸ் அனுப்புனேன். எனக்கும் லட்சுமி மேனனுக்கும் அண்டர் வாட்டர் ஷுட்டிங் இருக்கு. அதனால் வராதேன்னுட்டார். வேற வழியில்லாமல் ஒரு நாள் சொல்லாமலே போயிட்டேன். நான் வந்திருக்கேன்னதும் கேரவேனுக்குள்ள வரவழைச்சு பேசினார். மதியம் லஞ்ச் சாப்பிட்டோம். வா… ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போவலாம்னு கூட்டிட்டு போனார். அங்கு போன பிறகுதான் தெரிஞ்சுது, அன்னைக்கு லட்சுமி மேனன் வரவேயில்லைன்னு. எனக்கு ஒரு டவுட். ஏன் லட்சுமிமேனனை அவர் மற்றவங்ககிட்டயிருந்து காப்பாற்றி காப்பாற்றி வைச்சுக்கணும்?

இப்படி பெரிய தீப்பந்தத்தை கொளுத்தி போட்டுவிட்டு அவர் அமர, எரிகிற கிசுகிசு இன்னும் கொஞ்ச காலத்திற்கு பத்திகிட்டு எரியும் போலிருக்கேன்னு கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு விஷாலின் பேச்சுக்காக காத்திருந்தார்கள் நிருபர்கள்.

நல்லவேளையாக மனசுக்குள் ஒண்ணுமேயில்லை என்பதை போட்டு உடைத்தார் விஷால். விஷ்ணு சொன்னது நிஜம்தான். நான் காப்பாற்றிக்கணும்னு நினைச்சது லட்சுமி மேனனை இல்ல, விஷ்ணுவைதான். உங்கப்பா போலீஸ் அதிகாரி. மற்றவங்களுக்கு விலங்கு போட்டு போகும்போது பார்த்திருப்பே. ஆனால் நீயே போட்டுக்குற நிலைமை வர வேண்டாம்னுதான் நான் உன்னை லட்சுமி இருக்கும் போது வரவழைக்கல என்றார் விஷால். இனிமே லட்சுமிமேனன் பற்றி பேசுனே… நீ புதுசா வாங்கி வச்சுருக்கிற கிரிக்கெட் பேட்டாலேயே அடிப்பேன் என்றார் செல்லமாக.

பெண்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை பற்றி அதற்கப்புறம் விஷால் சொல்ல சொல்ல, அவர் மீது தாய்குலம் தனி அன்பு செலுத்தும் இனிமேல். நான் பாலா சார் படத்தில் நடிக்கும்போது பதினேழு நாள் பெண் வேஷம் போட்டிருந்தேன். அந்த வேஷத்துடனேயே என்னை துணை நடிகைகளிடம் பேச வைப்பார். அப்படியே ஆறு நாட்கள் ஓடியது. என்னையறியாமல் நான் முந்தானையை இழுத்துவிட்டுக்க ஆரம்பிச்சேன். ஷாட்ல முந்தானையை கொஞ்சம் ஒதுக்குங்க என்று கேட்டப்ப முடியாது சார்னு சொல்லிட்டேன். அந்தளவுக்கு அந்த கொஞ்ச நாளிலேயே பெண்மையின் நாணத்தையும் அடக்கத்தையும் புரிய வச்சுது அந்த கேரக்டர். அன்னையிலிருந்து நான் எல்லா பெண்களையும் வணங்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த படத்தில் நடிச்சுருக்கும் சரண்யா மோகன், இனியா, லட்சுமிமேனன் இவங்க எல்லாரையும் கையெடுத்து மரியாதையோடு வணங்குறேன் என்று அவர் சொல்லி முடிக்கையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார் விஷால்.

இதற்கப்புறமும் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கும்மியடிப்பீங்க?

Vishal puts a seal on gossip mongers!

The audio launch of Naan Sigappu Manithan was held on 13th March at Sathyam Multiplex with all cast and crew lined up, barring the female lead, Lakshmi Menon. She could not make it as he was writing her 11th std. examination. Though she was absent the entire speech of the event was revolving around her.

Everyone was including the Vishnu Vishal who is also an invitee, were curious to know about the chemistry between Vishal and Lakshmi Menon. Vishnu Vishal narrated how he was not let to see Vishal and Lakshmi Menon during the shoot, as Vishal was avoiding him not to come to the shooting spot. When he went without informing Vishal to the spot, he was in for disappointment as he could not see Lakshmi as there was no scene involved that day. He raised the doubt why he should protect Lakshmi Menon from others.

Speaking on the occasion Vishal while explaining the reason for giving protection to Lakshmi Menon, he walked into the hearts of female audience, for sure. Such was his crisp answer to the doubts and gossips, he has put a strong seal to the gossip mongers. Vishal while chiding Vishnu Vishal in a lighter vein, admitted that he plays a protector not only to Lakshmi Menon, but to Iniya, Saranya Mohan and Lakshmi Menon, as he respect the feminine qualities. He narrated how acting in a Women’s role for ten days during the shoot of Bala’s film Avan Ivan, when the director asked me (he was wearing women’s dress for the shoot) to mingle with women to get into the skin of the character and feminism. While lauding every woman for their exquisite qualities, he said he was able to understand their inner strength and feelings because of that shoot. He therefore started respecting every woman and Lakshmi Menon is also a woman he cares, he pointed out.

From now on Vishal and his co-stars can sleep peacefully without worrying for gossip mongers.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெருசலேமில் உலகின் பழமையான முகமூடிகள் கண்காட்சி

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உலகின் பழமையான முகமூடிகள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை...

Close