விஜய்சேதுபதி வேணாம்… அலம்பல் பண்ணும் ஐஸ்

ஒரு நயன்தாரா, ஒரு ஹன்சிகா, ஒரு தமன்னா, ஒரு காஜல்… இப்படி யாரு கால்ஷீட்டாவது கிடைக்குமா பாருங்களேன் என்று தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறார்கள் விமல், நகுல், மாதிரியான ஹீரோக்கள். ஆனால் காஞ்சா காஞ்ச சட்ட, காயலேன்னா ஈர சட்ட பாணியில் எது கிடைச்சாலும் பரவால்ல ரேஞ்ச் தான் விஜய் சேதுபதி. அதற்கேற்றார் போல காயத்ரி, ஐஸ்வர்யா என்று மாறி மாறிதான் இவருக்கு ஜோடிகள் அமைந்தது. இப்போது கமிட் ஆகியிருக்கும் ஒரு படத்தில் மணிஷாவுடன் நடிக்கிறாராம்.

இப்படி நம்பரே இல்லாத தாயக்கட்டைகளை உருட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு நாளும் ஹன்சிகா வேண்டும் என்றோ, நயன்தாரா வேண்டும் என்றோ கேட்கக் கூட தோணாமல் போனது ஆச்சர்யம்தான். இந்த துரதிருஷ்ட வேளையில்தான் இந்த செய்தியும். இதுவரைக்கும் விஜய் சேதுபதிக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வந்த ஐஸ்வர்யா, திடீரென அவருடன் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். காரணம்?

பொல்லாத கிசுகிசு எழுத்தாளர்களின் கைங்கர்யம்தான். தொடர்ந்து ஐஸ்ர்யாவுக்கு சிபாரிசு செய்கிறார் விஜய் சேதுபதி என்று எழுதப்போக, ஐஸ் வீட்டில் ஒரே நெருப்பு மழையாம். நானே கஷ்டப்பட்டு வளர்ந்த பொண்ணு. இந்த நேரத்தில் கேரியர்தான் முக்கியம். இப்படியெல்லாம் கிசுகிசு வரும்னா எனக்கு விஜய் சேதுபதியே வேணாம். நான் வேற யாரு கூடவாவது நடிச்சுட்டு போறேன். இனி நோ ரிப்பீட் என்று கூறிவிட்டார்.

ரோலருக்கு கோவம்னா ரோட்டுக்கு நிம்மதிதான்!

Aishwarya is furious with rumours

After catapulted to higher status Kollywood heroes demand popular heroines to play opposite to them. However Vijay Sethupathi is one who does not insist on who should pair with him and always get to go whoever is cast opposite to him. Till recently Aishwarya and Gayathri were given the roles opposite to him, except for Pizza where he paired with Ramya Nambeesan. After a long gap now Manisha Yadav has been roped in to play opposite to Vijay Sethupathi.

Since Aishwarya was playing his sweet heart in more number of films the gossip columnist started writing that Vijay Sethupathi recommends her to play opposite to him. This has created problems in her house as well which made her furious with the rumour mongers. She said that she bagged the offer for Rummy and Pannayarum Padminiyum only after her performance in Attakkathi which helped her. The reports that suggest that the hero was instrumental in getting her new offers are totally false and baseless. Now she has decided to put an end to this episode, by not doing any role with Vijay Sethupathi, henceforth.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முடிவுக்கு வந்த உதயநிதியின் வரிவிலக்கு போராட்டம்

வரிவிலக்கு சர்டிபிகேட் மட்டும் கிடைக்கவில்லையென்றால் அந்த தயாரிப்பாளரின் பாக்கெட்டை எலி கடித்த நிலைமைதான். அவர் சாதா தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, உதயநிதி ஸ்டாலின் மாதிரி பாக்கெட் பலமான...

Close