விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் கதை இதுதான்… !

ஒரு ஜில்லா மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த ஜில்லாக்களையும் கலக்கும் நோக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் ஜில்லா. (ஹ்ம்… ஒவ்வொரு படத்தையும் இப்படிதான் நினைச்சு எடுக்கிறாங்க, ஆனா ரிலீஸ் நேரத்துல புலி சைசுக்குல்ல பூனையை குறுக்கே விட்றாங்க?) இந்த படத்தின் கதை இப்போது அரசல் புரசலாக கசிய ஆரம்பித்திருக்கிறது. அதை தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் ‘தங்கப்பதக்கம்’ படத்தின் கதையை துசு தட்டியாவது தெரிந்து கொள்வது நல்லது.

நடிகர் திலகம் சிவாஜி பெரிய போலீஸ் அதிகாரி. அதுமட்டுமல்ல, கடமை தவறாத கண்ணியவான். அவருக்கு ஒரு பிள்ளை, தறுதலை… ஊர் பொறுக்கி… திருட்டு ஆசாமி… திருந்தாத தன் பிள்ளையை போலீஸ் அதிகாரியான அப்பாவே சுட்டுத் தள்ளிவிட்டு நிலைகுலைந்து நிற்பார். அப்படியே தங்கப்பதக்கத்தை ‘ம்கக்தபப்கங்த’ என்று திருப்பிப் போட்டு பாருங்கள்… அதுதான் ஜில்லா என்கிறது சில நம்பத்தகுந்த தகவல்கள்.

விஜய்யின் அப்பா மோகன்லால் பெரிய ரவுடி. அவரது மகன் விஜய் பெரிய போலீஸ் ஆபிசர். திருந்தாத அப்பாவை விஜய் என்ன செய்கிறார் என்பதுதான் கதையாம்.

செம விறுவிறுப்பாவுல்ல இருக்கு.

Story of Vijay’s Jilla

Ilayathalapathi Vijay’s Jilla is progressing swiftly creating a huge wave of expectations that it would conquer the whole of Tamil Nadu at BO. Well it is the same with each and every producer of Vijay who thinks on similar lines until some small bandicoot runs in and spoils the show. It is hoped that Jilla would not have any such problem as long as it does not touch politics. The story of Jilla is nothing but reversal of characters of Nadigar Thilagam Sivaji Ganesan’s superhit film Thanga Pathakkam.  In Thanga Pathakkam, Sivaji is a upright police officer who has a spoiled son who indulged in all sort of illegal activities. Despite the best efforts of Sivaji he could not turn his son into a good human. Finally Sivaji shot down his son when he was trying to sell his country’s secrets to foreigners. Jilla story is the same, except here, Vijay will be upright police officer and Mohanlal is Jilla rowdy. How theire relationship is intertwined and if Vijay is able to win over his father. Though there are lot of ways for the politics to snoop in, with such type of stories, one wonders how the director would be able to confine the story ……….?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹன்சிகாவுக்காக காத்திருக்கும் மூட்டைப்பூச்சிகள்….

தமிழ்சினிமா ஒரு காலத்தில் பொள்ளாச்சியில்தான் குடியிருந்தது. வெற்றிப்படங்கள் பலவும் அங்கேதான் படமாக்கப்பட்டன. ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், மணிவண்ணன், ஆகியோரின் படங்கள் பலவும் அங்குதான் எடுக்கப்பட்டன. சின்ன...

Close