விஜய் படத்தை இயக்கத் தயாராகும் பெண் இயக்குனர்?

‘தலைவா’ திரைப்படம் விஜய்யை பொருத்தவரை கோஷத்திற்கு மட்டுமே உதவும் ‘தொண்டா’வாகிப் போனது. அந்த படத்தை பற்றி மீண்டும் அவர் நினைத்துக் கூட பார்க்க விரும்பாத அளவுக்கு அவரை சுற்றியடித்தது சூறாவளி. ஆனால் அவ்வளவு வலியிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறதாம். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் இந்த நல்லதையும் அவர் நினைத்துப் பார்ப்பாரா தெரியவில்லை. அண்மையில் மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம் அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அந்த நேரத்தில் விஜய்யிடம் ஒரு கதையை சொல்லியிருந்தாராம். ஒரு பெண்ணிடமிருந்து இவ்வளவு சுவையான விறுவிறுப்பான கதை வரும் என்று யோசித்துக் கூட பார்க்காத விஜய் வியந்ததோடு நில்லாமல் இந்த படம் பற்றி பரிசீலிப்பதாகவும் கூறியிருந்தாராம். பொதுவாக விஜய் கேட்கும் கதைகளில் அவரை இம்ரஸ் செய்கிற கதைகளை துணிச்சலாக ஒப்புக்கொள்கிற வழக்கம் அவருக்கு எப்போதும் உண்டு. ஓடுற குதிரையில் சவாரி பண்ணுகிற ஹீரோ அவர் இல்லை. அவரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமுக இயக்குனர்கள் ஏராளம்.

காயத்ரிக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் வந்தால் அதை யாரால் தடுக்க முடியும்? கோ அஹெட்….

Ilayathapathy Vijay impressed with Gayathri Raghuram!

Gayathri Raghuram, the daughter of recently expired dance veteran Raghuram master, worked as assistant director for Vijay’s film Thalaivaa. During one of her stints in the making of the film, she narrated a story to Vijay who was very impressed and told her that he would keep in mind and let her know. Vijay has helped so many of young talents to come to the fore and shine. And we wish Gayathri too would get such an opportunity from Vijay to live her dreams.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்சேதுபதி கால்ஷீட் வேணாம்… கிடைத்தும் மறுத்த ‘தில்’ இயக்குனர்!

‘நான் நின்னது மட்டுமில்ல... தமிழ்நாடே கொண்டாடுற விஜய் சேதுபதியும் என் பக்கத்துல இடம் இல்லாம நின்னாரு....’ இப்படி அமீரால் ஒரு விழாவில் பாராட்டப்பட்டவர் விஜய் சேதுபதி. அவரே...

Close