ஹாலிவுட்டுக்கு போகிறார் ஜி.வி.பிரகாஷ்

 

இப்போதெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள அங்கே இங்கே காதை நுழைக்க வேண்டாம். ட்விட்டரை திறந்தால் போதும். சம்பந்தப்பட்டவர்களே செய்தியை கொட்டிக் கொடுக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை மேய்கிற ரசிகர்களுக்கு உண்மை செய்தியை நேரடியாகவே கேட்ட மாதிரியும் ஆச்சு.

 

தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளில் அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ், அண்மையில் ஒரு இந்தி படத்திற்கும் இசையமைத்து முடித்துவிட்டார். இப்படி இந்தியா முழுக்க அறியப்பட்ட இவர் அப்படியே தனது தாய் மாமன் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி ஹாலிவுட்டுக்கும் பறக்க நினைத்திருக்கிறார். அது நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார் தனது ட்விட்டரில்.

ஆமாம்… விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்கப் போகிறேன். அது பற்றிய அறிவிப்பை சம்பந்தப்பட்ட சினிமா நிறுவனமே அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் ப்ளீஸ் என்று கூறியிருக்கிறார் அவர். ஜிவி.பிரகாஷின் எந்த பாடலை கேட்டு இவரை தனது ஏரியாவுக்கு அழைத்ததோ ஹாலிவுட்? அது தெரிந்தால் நாமும் கொஞ்சம் தெளிவடையலாம்.

Read previous post:
அஞ்சலி அங்கேயே செட்டில் ஆகிட்டாராம்…

அஞ்சலியை பற்றி இன்று பிரபல வார இதழில் வந்திருக்கும் ஒரு செய்தி இன்டஸ்ட்ரியை கலங்கடித்திருக்கிறது. அவர் ஆந்திராவில் பிஸியாக இருக்கிறார், நிறைய தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்...

Close