ஹையோடா… அதர்வாவும் சிக்கிட்டாரு!

எல்லா பூனைக்கும் ஏதாவது ஒரு எலியின் மீது ஒரு கண் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் திரியும் விஷம பூனைகளில் அதர்வாதான் கொஞ்சம் நல்லவர் என்று நம்ம்ம்ம்பிக் கொண்டிருந்த பலருக்கும் இப்போது பலத்த அதிர்ச்சி. அவரை இரும்புக்குதிரையாக அடக்கிக் கொண்டிருக்கிறாராம் இரும்புக்குதிரை நாயகியான ப்ரியா ஆனந்த். ஆரம்பத்தில் இயல்பாக துவங்கிய நட்பு காலப்போக்கில் இறுகி கெட்டியாகிவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள் யூனிட்டில்.

எந்நேரமும் ஏதோ ஒரு சிந்தனையிலேயே அவர் மிதந்து கொண்டிருப்பதாகவும், ஷாட்டில் கூட அந்த தடுமாற்றம் தெரிவதாகவும் சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அந்த பாழாப்போன காதல்தான் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

காதலிக்கிற வயசு. காதலிச்சுட்டு போகட்டுமே என்று பச்சை கொடி பார்வை பார்த்தாலும், மந்திரிச்சு விட்ட மாதிரியே அதர்வா இருப்பதுதான் மற்றவர்களுக்கு பெரும் சிக்கலாக இருக்கிறதாம். வேலை நேரத்தில் வேலை. காதல் நேரத்தில் காதல் என்று இருந்துவிட்டால் யார் முணுமுணுக்கப் போகிறார்கள்? ஓட்டப்பந்தயத்தில் ரொம்ப பேர் கால் இடறி விழுவது இந்த காதலால்தான். அதர்வாவுக்கு அட்வைஸ் பண்ணுகிற எல்லா உரிமையும் பிரஸ்சுக்கு இருப்பதால்தான் இந்த அபாய மணி. காதுல விழுதா ஜுனியர் முரளி சார்…

Is Atharva in ‘love’ with his co-star?

Kollywood’s rumour base has a special and soft corner for Atharva as he could not be seen in any controversial matters and will only be focussing on his career building exercise. To the surprise of many Atharva too is get caught up now. He is now linked to his co-star of Irumbu Kudhirai. Both are said to be in whale of time whenever seen together in the sets.

However the problem is not falling in love, but focussing on the career is too important to be missed out. There are significant murmurs in the sets and in Kollywood circle that Atharva is seen of late in deep thoughts and slipping many a times during the shots, which clearly shows that his focus is elsewhere and not on the shoot.

It will be better and wise for Atharva to concentrate on career when he is on the sets and can have jolly time whenever he is off the spot. It is in his own interest we suggest Atharva not to mix up career and love. Hope he would understand.

Read previous post:
‘ இந்த கோச்சடையான் வேற… ’ முணுமுணுக்கும் ஹீரோக்கள்… முந்திக்கொள்ளும் படங்கள்

சிங்கம் இறுமுனா கூட கர்ஜனை என்று அஞ்சி ஓடுகிற அப்பாவி ஜீவன்களும் இருக்கதானே செய்கிறார்கள்? இது சிங்கத்துக்கான மரியாதை என்பதையும் இந்த நேரத்தில் ஒப்புக் கொண்டே ஆக...

Close