இருபத்தைஞ்சு வயசை தாண்டிய எல்லா டைரக்டரும் சினிமாவை விட்டு ஓடுங்க… -யூத்துகளின் அட்டகாசம்!

slide

இதற்கு முன்பு இப்படியொரு பிரஸ்மீட் நடந்திருக்குமா தெரியாது. உ – படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய இயக்குனர் ஆஷிக்கும் சரி, படத்தை வாங்கி வெளியிட இருக்கும் இ 5 நிறுவனத்தின் சிஇஓ திலகவதியும் சரி, இருபத்தைந்து வயசுக்கு மேலிருக்கும் எல்லாரும் கோடம்பாக்கம் வடபழனி ஏரியாவை காலி பண்ணிவிட்டு கூடுவாஞ்சேரி, கொளப்பாக்கம் ஏரியாவுக்கு ஓடிவிடுங்கள் என்பது போலவே பேசினார்கள். (இவங்கள்லாம் யூத்தாமாம்…?) அதிலும் திலகவதி பேச்சில் அநியாயத்து ஆதிக்க வாடை.

நான்லாம் ஒரு படத்தை எப்படி விமர்சனம் பண்ணுவேன்னு உங்களுக்கெல்லாம் நல்லா தெரியும். (இந்த பிலோ ட்வென்ட்டி முன்னாள் சன் டி.வி தொகுப்பாளர்) நானே ஒரு படத்தை விழுந்து விழுந்து ரசிச்சேன்னா பாருங்க, அந்த படம் எப்படியிருக்கும்னு? பொதுவா முப்பது வயசுக்கு மேல இருக்கும் இயக்குனர்கள் எல்லாரும் வீட்டுக்கு போயிடணும். இனிமேலும் படம் பண்ணிட்டு இருக்கக் கூடாது என்றார். இங்குதான் போட்டார்கள் கிடுக்கிப்பிடியை. ஏங்க… படத்து ட்ரெய்லர்ல நீங்க படம் பண்ண ட்ரை பண்ணுறதா காட்டுற தம்பி ராமய்யாவுக்கே வயசு நாற்பதை தாண்டி இருக்குமேங்க. அப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க என்றார்கள் நிருபர்கள்.

அதனால்தான் படத்துல அவருக்கு இயக்குனர் வாய்ப்பே கிடைக்கலங்கற மாதிரி காட்டியிருக்கோம் என்றார் டைரக்டர் ஆஷிக்.

இந்த படம் சினிமாவில் இயக்குனராவதற்காக போராடும் ஒரு முதிர் கண்ணனின் வாழ்க்கை வரலாறாக இருக்கும் போலிருக்கிறது. நகைச்சுவை ஜானர் என்றார்கள். ஜனவரி இறுதியில் வெளியாகும் படத்தை கத்தி அருவா கடப்பாரை சகிதமாக பார்க்க ஆவலாக இருக்கிறார்களாம் நாற்பதை தாண்டிய ஆயிரக்கணக்கான உதவி இயக்குனர்கள்.

இப்பவே உங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் தயார்…

Director Ashiq says he is ready to take on Kollywood

The press meet of film ‘uoo’ was held today when the director and producer Thilakavathy said unequivocally that they are ready to take on Kollywood film makers. Thilakavathi, who earlier worked as anchor in Sun TV, has produced the film ‘uoo’. She said normally her film reviews would be very hard, but she herself has appreciated the film. It is time, directors who crossed youth age can retire for the youth to take over Kollywood she declared. When pointed out that Jaiprakash who has casted on her film was not youth, director Ashiq interevened to say, it is exactly because of that he finds it difficult to get the opportunity to direct, in the film.

The film appears to be the challenges faced by a mid-aged protagonist named Kannan who seeks an opportunity to direct a film, told humorously.

1 Comment
  1. sakthivel perumalsamy says

    ” மூத்த இயக்குனர்களை வீட்டுக்கு அனுபறது இருக்கட்டும்…மொதல படத்த ரிலீஸ் பண்ணுங்க…அப்புறம் தெரியும் யாரு யாரை வீட்டுக்கு அனுப்புவாங்கனு ….ஓவரா பேசி பல பேரு இப்படி ஒளிஞ்சு போயிருகாங்க மக்கா..படிச்ச புள்ளைக பாத்து இருங்க …..”

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா என்னை மிரட்டுகிறார்…. பிரஸ்மீட்டில் பொங்கிய இளம் இயக்குனர்

சூர்யா என்னை மிரட்டுகிறார்.... இப்படியொரு இயக்குனர் பிரஸ்மீட்டில் கொந்தளித்தால் எப்படியிருக்கும்? கொந்தளித்தார் ஒருவர். சரவணன் என்கிற சூர்யா படத்தின் இயக்குனரான எஸ்.எம்.ராஜாதான் அவர். பொதுவாக ஒரு படத்திற்கு...

Close