இருமலானது கர்ஜனை?

வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து அதுக்கு காண்டா மிருகம்னு பேரு வச்ச மாதிரி ஆகிருச்சு லிங்குசாமியின் இன(ம்) பற்று. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘இனம்’ படத்தை வேறு வழியில்லாமல் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் லிங்குசாமி. காரணம், அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு சந்தோஷ்சிவன்தான் ஒளிப்பதிவாளர். யாருமே வாங்காத படத்தை நீங்களாவது வாங்கிக் கொள்ளணும் என்று சந்தோஷ்சிவன் கொடுத்த குடைச்சலால்தான் அவர் இந்த வேலையில் இறங்கினார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் லிங்குசாமிக்கு ஆதரவாக சில ‘டைமிங்’ போராளிகளும் இறங்கியிருப்பதில் கூட ஆச்சர்யமில்லை. நேற்று பிரஸ்சை கூட்டி, படைப்பாளிகளுக்கு படைப்பு சுதந்திரம் வேண்டும் என்கிற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள் டைரக்டர்கள் விக்ரமன், செல்வமணி, சசி, பாலாஜிசக்திவேல் உள்ளிட்டோர்.

லிங்குசாமியை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய செஞ்சோற்று கடமை அவர்களுக்கு இருக்கிறது. அதை தவறென்று சொல்வதற்கில்லை. இந்த நேரத்தில் விழித்துக் கொள்ளும் படைப்பு சுதந்திர பிரச்சனை, இதே காரணத்திற்காக வேறு சில படங்களுக்கு நேர்ந்தபோது இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்புவது வீண் நேர விரையம்.

நமது ஆதங்கமெல்லாம் இதுதான்.

ஈழ பிரச்சனையின் நிஜத்திற்கு எதிராக வெளிவரும் இதுபோன்ற திரைப்படங்கள் இதற்கு முன் வந்தபோதெல்லாம் கொந்தளித்து அந்த படங்களுக்கெல்லாம் கொள்ளி வைத்த இனப்போராளி சீமான், கவிஞர் தாமரை போன்றவர்கள் எல்லாம் இப்போது இந்த பிரச்சனையில் வாய் மூடி மௌனியானது ஏன்? லிங்குசாமி என்ற ‘முதலாளியை’ காப்பாற்றத்தானா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.

தேவையில்லாம அந்த படத்துக்கு பப்ளிசிடி கொடுத்து ஓட வச்சுரக் கூடாதே என்கிற அக்கறைதான் காரணம் என்றால், அந்த கொள்கையை இனி வரும் இதுபோன்ற பிரச்சனைக்குரிய படங்களுக்கும் பின்பற்றுவார்களா? கர்ஜனை இருமலாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான நேரமிது.

கடைசி செய்தி – சென்னை அம்பத்துரில் ‘இனம்’ படம் திரையிடப்பட்ட இரண்டு தியேட்டர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த படத்தை ஓடவிடாமல் தடுத்திருக்கிறார்கள் ‘நிஜமான’ உணர்வாளர்கள் சிலர். அவர்களை தொடர்பு கொண்டு ஆர்.கே. செல்வமணி சமாதானப்படுத்தி வருகிறாராம்.

Is Lingusamy being protected from Inam protests?

Lingusamy out of his generosity agreed to distribute Santosh Sivan’s film Inam which talks about the Sri Lankan Tamils in a positive way. However protests against screening of the film are reported from few theatres. A handful of directors including Vikraman, RK Selvamani, Sasi and Balaji Sakthivel have given a statement saying the crator’s vision has nothing to do with politics, directors should be given creative freedom to showcase their wisdom and talent. Though there is nothing wrong in such statement our pertinent question is where these creative artistes have gone when such protests emerged in recent past for many such films. Even director Seeman and Lyricist Thamarai who were very vocal for their support for Sri Lankan Tamils are silent now.

If this is to help the producer Lingusamy from suffering loss, would these creative minds follow the same steps in future if any protests emerge against films supporting creators’ freedom?

Latest update: Director Selvamani is holding talks with protestors who agitated against screening of the film Inam at suburb theatres at Ambattur.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தெனாலிராமன் ட்ரெய்லர்

http://youtu.be/tE12Y88nmAQ

Close