பாலாவுக்கும் அமீருக்கும் ஆகாது. அதுக்காக இப்படியா?

இயக்குனர் பாலாவும் அமீரும் ஒன்றாக கிளம்பி சென்னைக்கு வந்தவர்கள். முதலில் பாலா டைரக்டராகிவிட்டார். ஆனால் அமீர் சொந்த கையால் கரணம் போட்டு தயாரிப்பாளராகி இன்று ‘நானும் சளைச்ச ஆளில்லை’ என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். முதலில் இயக்குனரான பாலா, தன்னை கண்டு கொள்ளவில்லையே என்கிற வருத்தம் அமீருக்கு நிறையவே உண்டு. அதன் விளைவாக ‘இவன்தான் பாலா’ என்று அவர் ஒரு தொடர் எழுத, ‘எவன்தான் பாலா’ என்று இவரும் ஒரு தொடர் எழுதி நக்கலடித்தார். இப்படியாக ஆரம்பித்த யுத்தம் அப்படியே கனல் குறையாமல் அனல் வீசிக் கொண்டிருப்பதாக காதை கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அதற்கு உதாரணமாக சொல்லப்படுகிற விஷயங்களை பட்டும் படாமலும் கேட்டு, விட்டும் விடாமலும் எழுததான் வேண்டியிருக்கிறது.

பரதேசி படத்திற்காக பாலாவால் நடிக்க அழைக்கப்பட்டு, பின்பு ‘நடிக்க வைக்க விருப்பம் இல்லே’ என்று அலைகழிக்கப்பட்ட ஸ்ரேயாவை தனது அடுத்த படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார் அமீர். கதைக்கு பொருத்தமா இருந்திருப்பாரு. அதனால் நடிக்க வைக்கிறாரு. இதெல்லாம் ஒரு விஷயமா? என்று கூறிவிட்டு கலைந்து போகலாம் என்றால், அடுத்த கேள்வியை வைக்கிறார்கள் இங்கே. என்ன தெரியுமா?

இதே பாலா படத்திலிருந்து பாதியில் விரட்டப்பட்ட ஜி.வி.பிரகாஷ், இப்படி பாதியில அத்துவிட்டுட்டாரே… என்று ஓரிடத்தில் அழ, அடுத்த சில நிமிடங்களில் ஜி.வி.க்கு ஒரு போன் போனதாம். எதிர்முனையில் அமீர். ‘தம்பி… நீங்க என் கூட அடுத்த படத்துல வேலை செய்யணும். நாடே ரசிக்கிற மாதிரி பாட்டுகள போடுறோம்’ என்றாராம் அமீர்.

அப்படின்னா வதந்தி கன்பாஃர்ம்தான் போலிருக்கு!

Is Ameer scoring points against Bala?

Though director Ameer and Bala have come to Chennai to try their hands in films, it was Bala who got the opportunity first and became a popular director. Though Ameer too has become popular and is now a producer as well, both he and Bala are maintaining distance from each other. Bala who roped in Shreya earlier for his upcoming film based on Karagattam, later rejected her. Ameer took the stance that Shreya would be the lead pair in his upcoming film. Though there is nothing unusual about it, the next thing Ameer did cause reason to believe the rumours that not all is well between the two. Music composer who was earlier roped in and thrown out by director Bala for his film, has now been roped in by director Ameer to compose music for his film.

Is it coincidence or intentional, answer is your choice?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹை… ரஜினி! துள்ளிக்குதித்து ஓடிவந்த நடிகை

கோச்சடையான் பட பாடல் வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்த ரஜினியை பார்க்க மொட்டை மாடிகளிலும் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான கட்டிட முனைகளிலும் திரண்டு நின்ற கூட்டத்தை பார்த்து,...

Close