மிரட்டிய ரயில்வே…. மெர்சலாகாத அஜீத்!

ஒரே நேரத்தில் இருபெரும் ஹீரோக்களை மேய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் ஒரே நாளில் வெளியாகும் இரண்டு பெரிய படங்களுக்கு ஒரே ஸ்டன்ட் மாஸ்டர் என்றால் அவரது நிலைமையை கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான். ஆனால் மண்டை நிறைய காடாக வளர்ந்து கிடக்கும் முடிகளில் ஒன்றுக்கு கூட எவ்வித சிறு சேதாரமும் இல்லாமல் இரண்டு பட ஸ்டண்ட்களையும் அடித்து பட்டைய கிளப்பிவிட்டார் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா. இப்படி மண்டையை பிய்த்துக் கொள்ளாத இவரை பற்றிதான் கோடம்பாக்கத்தில் குமுற குமுற ஆச்சர்யப்படுகிறார்கள் சக ஸ்டண்ட் கலைஞர்கள்.

வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லாவுக்கும், அஜீத்தின் வீரம் படத்திற்கும் சில்வாதான் மாஸ்டர். படத்துல வர்ற சண்டைக்காட்சிகளை பார்த்தா, பார்க்கிற ரசிகனுக்கு உடம்பெல்லாம் பிய்ச்சுக்கணும் என்று கூறியே அழைத்து வந்தார்களாம் இரு இயக்குனர்களும். அதற்கேற்ப ஃபைட்டுகளை கம்போஸ் செய்திருக்கிறார் அவரும். அதுவும் அஜீத்துக்காக ஒரிசா பக்கத்திலிருக்கும் ராயகடா என்ற பகுதியில் இவர் எடுத்திருக்கும் ட்ரெய்ன் சேசிங் மயிர் கூச்செரிய வைக்கும் என்கிறார்கள்.

இந்திய ரயில்வே துறை இந்த முறை தென்னிந்திய நடிகர்களுக்கு பெரும் எரிச்சலை மூட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஏதாவது ட்ரெய்ன் ஷாட்டுன்னா நீங்க ஒரிசாவுக்கு வாங்கப்பா…’ என்கிறார்களாம் ஒரேயடியாக. இத்தனைக்கும் இந்தியா முழுக்க ஒரே ரயில்வே துறைதான். ஆனால் சதர்ன் ரயில்வே காட்டாத சலுகையை வடக்கு ரயில்வே காட்டுவதாக சந்தோஷப்படுகிறார்கள் சினிமாக்கார்கள். அதிருக்கட்டும்… சேசிங் காட்சிக்காக ஒரிசா போயிறங்கியது வெறும் ஃபைட்டர்கள் மட்டுமல்லவாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளும்தான்.

ஒரு கிராமத்தையே பின்னி மில்லில் உருவாக்கிவிட்டார்கள் வீரம் படத்திற்காக. கோவில், திருவிழா, கடைகள், வீடுகள் என்று ஏகப்பட்ட செட்டுகளை பின்னி மில்லில் உருவாக்கிய டீம், அப்படியே ஒரு ரயிலையும் கொண்டு வந்திருந்தால், இவ்வளவு பிரச்சனையில்லை. வேறு வழியில்லாமல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளையும் இழுத்துக் கொண்டு ஒரிசா போனார்களாம். சரி…. இப்படி அள்ளி இறைத்த கோடிகளுக்கு ஆன ரிசல்ட் என்ன?

சமீபத்தில் படத்தை முழுசாக பார்த்த (இன்னும் ரீரெக்கார்டிங் முடியவில்லை. சென்சார் ஆகவில்லை. அதற்குள்…) அஜீத், ‘நான் பரம திருப்திப்பா…’ என்றாராம் இயக்குனர் சிவாவிடம்.

Ajith satisfied with final product Veeram

Ajith’s Veeram and Vijay’s Jilla are the major films competing amongst the Pongal releases. Both the films have a common link. The link is stunt director Silva. He has choreographed the stunts for both the actors according to their styles and images, say Kollywood sources. The sources add that the chasing scene in the railway train shot in Odissa will be sure the talking point of the film. The shoot was done with nearly 4000 junior artistes participating along with Ajith and the stunt team.

The film is also special that the makers have created entire village itself inside the Binny Mills and shot important scenes of the film, viz. temple, festivities, shops and houses.

The re-recording of the film is underway and the first copy of the film is expected soon. Meanwhile it is learnt that Ajith who happened to see the rushes of the film, is a satisfied person and he seems to have expressed his happiness at the final output.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜில்லா எடிட்டர் மாற்றம்… விஜய் போட்ட உத்தரவு!

‘தலைவா ’ சறுக்கியதிலிருந்தே தன்னை ‘ஸ்டடி’ பண்ணிக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாகிவிட்டார் விஜய். கடக ராசிக்காரரான அவருக்கு சனி இருக்கும் இடத்தில் ஒரு வண்டி களி...

Close