‘மிஷ்கின் கேட்டப்ப முடியாதுன்னு சொன்னேன்…’ – ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ இன்ஸ்பெக்டர் ராகுல்!

முத்து காமிக்சில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் மாதிரியே, ஒருவரின் வாழ்விலும் திடுக்கிடும் திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அதே முத்து காமிக்ஸ் மூலமாக! கும்பகோணத்தில் வசித்து வரும் ராகுலன் இப்போது நடிகராகிவிட்டார். இவரை நடிகராக்கிய பெருமை மிஷ்கினையும், சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து கொண்டிருந்த முத்து காமிக்சையும்தான் சேரும்.

ஆள் பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தாலும், முத்து காமிக்ஸ் படிக்கிற அளவுக்கு குழந்தை மனசு ராகுலனுக்கு. வீட்டில் ஆயிரக்கணக்கான காமிக்ஸ் புத்தங்களை சேகரித்து வைத்திருக்கிற அளவுக்கு காமிக்ஸ் பிரியரும் கூட. ‘சித்திரம் பேசுதடி’ சமயத்தில் மிஷ்கினை சந்தித்தாராம் ராகுலன். பேச்சு வாக்கில் தன்னிடமிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் பற்றி இவர் சொல்ல, ‘நானும் படிச்சுட்டு தர்றேன்’ என்று அத்தனை புத்தங்களையும் வாங்கிக் கொண்டார் மிஷ்கின். இவர் படித்த புத்தகங்களை அவருக்கும் அவர் படித்த புத்தகங்களை இவருக்கும் மாற்றி மாற்றி கொடுத்து படித்துக் கொண்டார்கள்.

சாக்கு பை கழிவுகளை கூழாக்கி அதில் புதிய பைகளை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்புகிற நிறுவனத்தை நடத்தி வரும் ராகுலன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வந்துவிடுவார். புத்தகங்கள் பற்றி மணிக்கணக்காக பேசுவார்களாம் இருவரும். இந்த நட்பின் அடிப்படையில் ‘ஓநாயும் ஆட்டுகுட்டியும்’ கதையை ராகுலனிடம் சொன்னாராம் மிஷ்கின். கதையை சொல்லி முடித்தவர் அப்படியே ஒரு சஸ்பென்ஸ் கொடுத்தார் ராகுலனுக்கு.

‘அந்த பிச்சை என்கிற இன்ஸ்பெக்டர் கேரக்டர்ல நீங்கதான் நடிக்கிறீங்க…’ என்பதுதான் அது. ‘ஐயோ, நடிப்பா? நமக்கு ஆகவே ஆகாது. வேற யாரையாவது நடிக்க வைங்க’ என்று ராகுலன் மறுக்க, ‘நீங்க வந்து கேமிராவுக்கு முன்னாடி நில்லுங்க, மற்றதை நான் பார்த்துக்குறேன்’ என்று இவரை நடிகராக்கிவிட்டார் மிஷ்கின். ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு நாள் கூட இவருக்கு மிஷ்கின் இப்படி நடிங்க… அப்படி நடிங்க என்று சொல்லவே இல்லையாம். இவர் நடிப்பதை பார்த்துவிட்டு ‘இதுவே நல்லாயிருக்கு. கன்ட்டினியூ பண்ணுங்க’ என்று கூறிவிட்டாராம் மிஷ்கின்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஓடுகிற திரையரங்களுக்கு போயிருந்தாராம் ராகுலன். ரசிகர்கள் இவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராஃப் கேட்பதும், கூடவே நின்று செல்போனில் படம் பிடித்துக் கொள்வதுமாக திணறடித்துவிட்டார்களாம். இதுவரைக்கும் நடிக்கிற ஆசையே இல்லாமல் இருந்துச்சு. இனிமே நல்ல கேரக்டருக்காக யாராவது கூப்பிட்டா நடிக்கலாம்னு தோணுது என்றார்.

மிஷ்கினின் அடுத்த படத்திலும் ராகுலன் இருக்கிறார் என்பதுதான் அட்வான்ஸ் ஹேப்பி இந்த புத்தம் புது நடிகருக்கு!

Refused to act in Onayum Attukuttiyum when Mysskin asked – Ragulan

Ragulan, Kumbakonam based small entrepreneur, is a book-worm especially comics books. He happened to meet Mysskin during the shoot of Chithiram Pesudhadi and their friendship blossomed thanks to the books both are fond of. Whenever he visits Chennai, on personal or business trip he used to meet Mysskin and discuss hours together on books. On one such occasion, Mysskin told him the story of Onayum Attukuttiyum and also threw a bomb-shell that Ragulan would do the role of Inspector, Pichchai. Raghulan immediately refused to act requesting to cast some one in the film. But Mysskin insisted and Raghulan donned the role in the film. The best part is Mysskin had never in one scene suggested to Raghulan to act this way or that way and the ‘new’ actor did the entire shoot on his own conception of the character. He is happy as he is receiving kudos from every one, but his happiness is doubled as he would be acting in Mysskin’s next film too.

2 Comments
  1. மணிண்டன் says

    யார் இந்த இணையத்தின் ஆசிரியர்…

    1. rs says

      R.S. Anthanan

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சவுண்டே வராத சங்குக்கு உதடே வீங்குற அளவுக்கு உதார்… -வில்லங்கத்தில் விஜய் ‘லேசு’பதி!

விஜய் சேதுபதியை விஜய் ‘லேசு’பதியாக்கி விட்டது பாலகுமாரா. வாங்கியவர்கள் எல்லாருக்கும் வண்டி வண்டியா நஷ்டம் என்கிறது கலெக்ஷன் ரிப்போர்ட். ஆனால் தயாரிப்பாளருக்கு செம லாபம். ஏனென்றால் விஜய்...

Close