ரஜினி இப்படி பண்ணுவாருன்னு நெனச்சுக்கூட பார்க்கல….!

பணமே பதுக்கல் சாமியாக இருக்கும் பலருக்கு மனமே மந்திரசாவி என்பது மட்டும் புரியாது. ஆனால் தனது ஆரம்பகால வாழ்வை அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் ரஜினி செய்த ஒரு நற்காரியம் இருக்கிறதே, அது பணத்தையும் மனதையும் சேர்த்து முடிச்சுப்போட்டு ஏ.வி.எம் ஊழியர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

சற்றே தாமதமான செய்திதான். ஆனால் சம்பந்தப்பட்டவர்களே காதும் காதும் வைத்தமாதிரி சொன்ன பின்னால் எழுதாவிட்டால் அது அந்த நல்ல மனசுக்காரருக்கு செய்கிற துரோகம் என்பதால் இதோ பிளாஷ் அடிச்சாச்சு. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள் என்பதை யாவரும் அறிவர். அதற்கான போஸ்டர்களையும் வாழ்த்துக்களையும் ஸ்டுடியோவின் உள்ளேயிருந்து பார்த்து சந்தோஷப்பட்ட ஏ.வி.எம் நிறுவன செக்யூரிடிகளுக்கு தெரியாது, இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த விழா நாயகனே தங்களை தேடி வரப்போகிறார் என்று.

இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அப்படியே வெறிக்க வெறிக்க வானத்தை பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிடிகள் அருகில் வந்து நின்றது அந்த கார். அதற்குள்ளிருந்து கம்பீரமாக கீழே இறங்கிய ரஜினி, சடக்கென அந்த செக்யூரிடியின் தோளில் கைபோட்டுக் கொள்கிறார். ‘அட… ரஜினி சார்’. கண்களை ஒரு முறைக்கு பல முறை கசக்கி பார்த்தாலும், அது கனவல்ல. நிஜம் என்று புரிகிறது. ஐயா… என்று கையெடுத்து கும்பிட்ட செக்யூரிட்டி கையில் கொத்தாக சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு அடுத்த காவலரை நோக்கி காரை திருப்ப சொல்கிறார் ரஜினி.

இப்படி ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இண்டு இடுக்கு விடாமல் வலம் வந்தவர் அத்தனை ஊழியர்களுக்கும் பணத்தை அள்ளி இறைத்துவிட்டு, அப்படியே தோளில் கைபோட்டு நலம் விசாரித்துவிட்டு மின்னலை போல காரில் கிளம்பிவிட்டார். சார்… இது மாதிரி அவ்வப்போது வருவார். காதும் காதும் வச்சது மாதிரி பணத்தை அள்ளிக் கொடுத்துட்டு போயிட்டே இருப்பார். அதுல அவருக்கு ஒரு சந்தோஷம். இந்த பணத்தை விட, அவரே வந்து நலம் விசாரிச்சாரே… அதுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷம் என்றார் அந்த ஏ.வி.எம் ஊழியர்.

வாழ்ந்த இடத்தை மறக்காத ரஜினிக்கு வாழ்த்தும் இடத்திலிருந்து ஒரு பொக்கே தருவோமா?

Only Rajini can do it!

There are only very few people who recall the help they received during their struggles and reward them going to them personally and specifically without any publicity. If India still thrives in cultural standards it is thanks to such people.

In this handful of these people, we have noticed our own super star Rajini leads the pack. There are stories about his generosity and humble nature, etc.etc. But this one is really another gem in his adorned crown.

On the eve of his birthday on 12th Dec. night, Rajini got down from his car inside the AVM Studio, and walked straight to the security. He handed over to him few thousands of rupees and walked entire length and breadth of the studio and met each and every staff, workers and security personnel and gave them money. Not only that he spoke to them with genuine love and enquired about their well being. After speaking to each and every person and personally gave them money, he left the place without a trace.

Recalling the incident a member of AVM studio said that it is not money that made them happy, but it is his enquiring them about their well being personally, had his arm on their shoulders while speaking to them and spending time with them, made them very happy.

This information has come to light from the sources who received such pleasure, and not from the man or sources close to him, who showered such warmth and generosity! Hats off to you, Rajini! Long live your tribe!

4 Comments
  1. aara says

    லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆன செய்திதான் சார்

  2. rajinimani says

    தலைவர் தலைவர்தான் மறக்கமாட்டார் வாழவைத்த தமிழ் ரசிகர்களையும் பணிபுரியும் நண்பர்களையும்.. இன்னும் காலங்கள் இருக்கிறது தலைவா சரியான முடிவு எடுப்பார் என்று…

    1. Snake says

      1)தலைவர் தலைவர்தான் மறக்கமாட்டார் வாழவைத்த தமிழ் ரசிகர்களையும் பணிபுரியும் நண்பர்களையும்
      ——————————————–
      http://www.youtube.com/watch?v=XjgM5YmHDHw(please go to 3:36)

      2)இன்னும் காலங்கள் இருக்கிறது தலைவா சரியான முடிவு எடுப்பார்.
      —————————————
      when after he turns 90 what’s the use ?

  3. ponravindran says

    oh nice

Reply To ponravindran
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
வாஸ்து சாஸ்திரத்தை நம்பும் விவேக்?

‘அதுவேற இதுவேற’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. மேடைகொள்ளாத சேர்கள். சேர்கள் முழுக்க ஆட்கள் என்று நிரம்பியிருந்த விழாவில், விவேக்கின் பேச்சு வழக்கம்போல...

Close