ம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்

‘மந்தையில நின்னாலும் வீரபாண்டி தேரு’ என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிப்பதில் ஏ.எம்.ரத்னத்திற்கு நிகர் அவரேதான்! தான் எவ்வளவு கஷ்டத்திலிருந்தாலும், அந்த கஷ்டத்தை தன் பட ஹீரோக்களிடம் காண்பித்துக் கொள்ளாத மனிதர். தன் பட ஹீரோக்களை எப்பவும் சவுகர்யமாக வைத்துக் கொள்வதில் அவருக்கு நிகரில்லை என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ஆரம்பகாலங்களில் மனஸ்தாபம் இருந்தாலும், அதற்கப்புறம் இவரை அரவணைத்துக் கொண்ட அஜீத், தொடர்ந்து இவரது பேனரில் படங்கள் நடித்து வந்ததை இன்டஸ்ட்ரியே பொறாமையோடு நோக்கியது.

அந்த பொறாமைக்கும் ஒரு வேல்யூ உண்டல்லவா? திடீரென தன் கூட்டணியை டமால் ஆக்கிக் கொண்டார் அஜீத். தற்போது அவர் நடித்து வரும் AK57 படத்தை சத்யஜோதி நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்தை தாண்டிய நிலையில் தன் அடுத்தப் படம் பற்றி யோசிக்க வேண்டும் அல்லவா? பிக்கல் பிடுங்கல் இல்லாத தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடைய அஜீத், தனது பார்வை மீண்டும் ஏ.எம்.ரத்னம் பக்கமே திருப்பியிருக்கிறாராம்.

வழக்கம்போல அஜீத் சொல்லும் இயக்குனருக்கே யெஸ் சொல்ல காத்திருக்கிறாராம் ரத்னம். அரசல் புரசலாக இதை தெரிந்து கொண்ட வியாபார வட்டாரம், இப்பவே ஏ.எம்.ரத்னத்திற்கு வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

கூட்டமாக இருப்பது மட்டுமே கூட்டணி என்று நம்புகிறது அரசியல்! நமக்கு வாட்டமாக அமைவதே கூட்டணி என்று நம்புகிறது சினிமா!

To Listen Audio Click Below:-

https://youtu.be/vLAWRkxdKkg

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்!

ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்... இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆனால் பக்கோடா சட்டியில் பலாப்பழத்தை...

Close