விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யை முழுசாக நம்பிய விஜய் ஆன்ட்டனி!

மாணவர்களை அடிமையாகவே நடத்தும் ‘குரு குலம்’ என்கிற கான்சப்ட் இப்போதும் இருக்கிறதா, தெரியாது. ஆனால் குரு பலம் என்கிற விஷயத்திற்கு விஜய் ஆன்ட்டனி கொடுக்கிற மரியாதை பக்கம் பக்கமாக எழுத வேண்டிய ஒன்று! 2005 ல் சுக்கிரன் என்ற படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனை இன்றளவும் மறவாத இடத்தில் வைத்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

இன்று சென்னையில் நடந்த ‘சைத்தான்’ பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு சீஃப் கெஸ்ட் எஸ்.ஏ.சிதான். இங்கு மட்டுமல்ல, தனது வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் தவறாமல் அவரை அழைத்துவிடுவார் வி.ஆ. விழாவில் பேசிய எஸ்.ஏ.சி தனக்கும் விஜய் ஆன்ட்டனிக்குமான ஆரம்ப நாட்களை சுவாரஸ்யமாக நினைவுகூர்ந்தார்.

“சுக்ரன் படம் எடுத்த நேரத்தில், இவருடைய பெயர் அக்னி. டைட்டிலில் என்னப்பா பேர் போடுறது என்று கேட்டதற்கு, “அக்னின்னு போடுங்க” என்றார். உன் சொந்தப் பேர் என்ன என்றேன். விஜய் ஆன்ட்டனி என்றார். “விஜய் என்றால் வெற்றி. ஆன்ட்டனி என்பதும் நல்ல பெயர்தான். ஏன் அக்னின்னு வைக்கணும். பேசாம சொந்தப் பெயரே இருக்கட்டுமே” என்றேன். இன்று அவர் வளர்ந்து பெரிய ஹீரோவாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

மேடை கொள்ளாமல் விருந்தினர்களை ஏற்றி பெருமைப்பட்ட விஜய் ஆன்ட்டனி, தனது உரையை மட்டும் மிக மிக சுருக்கமாக வைத்துக் கொண்டார். வண்டி வண்டியா பேசுறதை விட, செயல்பாடு முக்கியம் என்று நம்புகிற பலரும் இப்படிதான்! சைத்தான் படத்தை இருமுகன், தேவி ஆகிய இரு வெற்றிப்படங்களை வாங்கி வெளியிட்ட ஆரா சினிமாஸ்தான் வாங்கியுள்ளது. (முந்தைய சென்ட்டிமென்டுகள் தொடரட்டும்… )

பின் குறிப்பு- இப்பவும் இசை சம்பந்தமான கல்வியை வித்வான்களிடம் கற்று வருகிறார் மிஸ்டர் சைத்தான். “தினம் தினம் எதையாவது கத்துக்கணும். அதுதான் நல்லது…” இதுவும் விஜய் ஆன்ட்டனியின் நம்பிக்கைதான்!

To Listen Audio Click Below:-

https://youtu.be/Gy5_nyZ2qdY

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்

Close