வாங்க… பாரதியாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்!

உதார்லேயே கிதார் வாசிக்கிறவங்க உலகத்தில் இருக்கிற வரைக்கும் உண்மை மாதிரி இருக்கிற பொய்களுக்கு சாவே இல்லை. தேவர் புலிப்படை என்ற சாதி கோஷத்தை ஆரம்பித்த நடிகர் கருணாஸ், அவர் பிறக்காத காலத்திலேயே போய் சேர்ந்துவிட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருடன் நிற்பது போல புகைப்படத்தை செட் பண்ணி அதை ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினாரே நினைவிருக்கிறதா? அப்போது சிரித்த பல வாய்கள், இப்போது கொட்டாவி விடக் கூட திறக்கப் போவதில்லை. ஏன்? அந்த ஒரு போஸ்டர்தான் கருணாசை இன்று எம்.எல்.ஏ அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. கட்… விஷயத்துக்கு வருவோம்.

அப்படியொரு தந்திரக்கலையை தன் ஓவியத்தில் கொண்டு வந்து ஓஹோவாகியிருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர்! (அடிக்கடி கமல்ஹாசனை விதவிதமாக படம் வரைந்து கண்காட்சியாக வைப்பாரே… அவரேதான்) வெளிநாட்டினர் மட்டுமே அனுபவிக்க கொடுத்து வைத்திருந்த அந்தக்கலையை இங்கு கொண்டு வந்த முதல் ஓவியர் ஸ்ரீதர் என்ற பெயரையும் தட்டிக் கொண்டு போயிருக்கிறார் அவர். கிட்டதட்ட முப்பரிமாண ஓவியங்கள் போல தோற்றமளிக்கும் பல ஓவியங்களை அவர் வரைந்து வைத்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் அது காலத்திற்கும் பரவசம் தரும் இனிய அனுபவம் மட்டுமல்ல, மனதில் தங்கிவிடக் கூடிய இனிப்போ இனிப்பு.

உதாரணத்திற்கு மகாகவி பாரதியாருடன் செல்ஃபி என்றால் எப்படியிருக்கும்? அந்த சந்தோஷத்தை அனுபவிக்க துடிக்கும் அனைவரும் ஒரு முறை தீவு திடலுக்கு ட்ரிப் அடித்தால் ஒரு ப்ளாஷ் க்ளிக்கில் சந்தோஷத்தை அள்ளிக் கொண்டு வந்துவிடலாம். ஏதோ நம் ஒவ்வொருவரின் மனசுடன் பேசி பேசி வரைந்து வைத்திருக்கிறரோ என்று நினைக்கிற அளவுக்கு நமக்கு பிடித்தவர்களின் ஓவியங்களையும் இயற்கை காட்சிகளையும் வரைந்து வைத்திருக்கிறார் ஸ்ரீதர்.

அனுபவிக்கணும் என்று நினைப்பவர்கள் இப்பவே கிளம்புங்க… சென்னை தீவுத்திடலுக்கு

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவ அப்படின்னா நானும் அப்படிதான்! பண மூட்டையை அவிழ்க்கும் த்ரிஷா!

போட்டி மட்டும் இல்லையென்றால், வேட்டி கூட இடுப்பில் நிற்காது பலருக்கு! நீயும் நானும் ஒரு கை பார்க்கலாம் வா என்கிற கோதாவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம். இங்கு...

Close