நான் யாரு தெரியுமா? அப்பாவி செக்யூரிடியை அதட்டிய கரண்!

பழைய ரேஷன் கார்ட்டை பையிலேயே வைத்துக் கொண்டு சுற்றினாலும், கரண் யார் என்பதற்கு மிக நீண்ட முன்னுரை தர வேண்டும்! கிட்டதட்ட அவரை மறந்தே போய்விட்டது உலகம். அவரும் தனது முந்தைய படங்களை சொல்லி, “நான்தான் அந்த கரண்” என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதை விட, உருப்படியாக ஏதாவது செய்து நிரூபிப்போம் என்று முயற்சி செய்ய கிளம்பிவிட்டார். அந்த முயற்சியின் வடிவம்தான் ‘உச்சத்துல சிவா!’

கரண் நடிக்கும் புதிய படத்தின் பெயர்தான் இது. இந்த படம் சம்பந்தமாக இதுவரை மீடியாக்களில் ஒரு போட்டோ கூட வராத நிலையில் திடீரென சென்னையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களும், தினத்தாள் விளம்பரங்களும், கரணை லேசு பாசாக நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் தேவையேயில்லாத இடத்தில் கோபத்தைக் காட்டி, தனது மன இறுக்கத்தை அவிழ்த்துவிட்டிருக்கிறார் அவர்.

வடபழனி குமரன் காலனியில் இயங்கி வருகிறது சினிமா தொழில் நுட்ப அமைப்பு ஒன்று. அங்கு தனது படம் சம்பந்தமாக வந்தவர், காரை நட்ட நடுவழியில் விட்டுவிட்டு இறங்கிப் போனாராம். ‘இதென்ன இப்படியொரு பார்க்கிங் நாலெட்ஜ்’ என்று திணறிப் போன செக்யூரிடி, ஓடோடி வந்து, “சார்… மற்ற வண்டிகளை எடுக்கறதும், விடறதும் சிரமம். கொஞ்சம் தள்ளி உள்ளே போட்டிங்கன்னா நல்லாயிருக்கும்” என்று கூற, பிடிபிடியென பிடித்துக் கொண்டாராம் கரண்.

“நான் யாருன்னு தெரியுமா உனக்கு? இறங்கிப் போன என்னை கூப்பிட்டு காரை தள்ளிப் போட சொல்றே? தொலைச்சுருவேன். யாரு வந்தாலும் நிக்கட்டும். நான் வந்துதான் காரை எடுப்பேன். இப்போ முடியாது” என்று கூறிவிட்டு விறுவிறுவென மாடி ஏறிவிட்டாராம். அதற்கப்புறம் வந்த கார்கள் திக்கலும் திணறுலுமாக ஆங்காங்கே நிற்க, கரண் கொடுத்த கஷ்டத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டாராம் அந்த செக்யூரிடி!

ரஜினியே குனிஞ்சு வணக்கம் சொல்ற கோடம்பாக்கத்துல, இப்படியும் சில நடிகர்கள்?

To listen the audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
suhasini denied to cauvery statement.

https://www.youtube.com/watch?v=i5r59sr5vzs&feature=youtu.be  

Close