கன்னட ஹீரோ சிவராஜ்குமாருக்கு ஒரே நாளில் பாராட்டு மற்றும் திட்டு! இதுதாண்டா தமிழ்சினிமா!
காவிரி விவகாரத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் வாயை திறந்தாலொழிய எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை போல மைண்ட் செட்டாகிக் கிடக்கும் மக்களும் இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்தை அறிய ஆவலாக இருந்த நேரத்தில்தான் இந்த காமெடி கூத்தும் அரங்கேறியது.
கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட நடிகர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சிக்க, அதே மேடையில் இருந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் அப்படி பேசியவரை கண்டித்தார். “ஒரு மாநில முதல்வரை நாம் இப்படி தரக்குறைவாக பேசக்கூடாது. இரு மாநிலத்திலும் விவசாயிகள் இருக்கிறார்கள். இருவருக்கும் நீர் தேவை முக்கியம். அரசு நல்ல முடிவாக எடுக்கும்” என்று அவர் கூறியதாக தகவல்கள் வந்தன.
நடிகர் சங்கம் காவேரி விஷயத்தில் ஆக்ரோஷமாக போராடப் போகிறது. கன்னட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு பேசுவார்கள் என்றெல்லாம் மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, சவசவ என்று ஒரு அறிக்கையை வாசித்தது நடிகர் சங்கம். அதில் கன்னட ஹீரோ சிவராஜ்குமாருக்கு இவர்கள் நன்றி தெரிவித்திருந்ததுதான் பலருக்கும் ஷாக். “அடுத்த தலைமுறைக்கான சிந்தனையோடு” தனது கருத்தை நியாயமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்த எங்களின் மூத்த கலைஞர் திரு.ராஜ்குமார் அவர்களின் புதல்வர் சிவராஜ்குமார் அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது அந்த அறிக்கையில்.
இவர்கள் இப்படி பாராட்டிக் கொண்டிருக்க அன்று காலையில் சென்னையில் நடந்த ‘கடிகார மனிதர்கள்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வி.சி.குகநாதன், அதே சிவராஜ் குமாரை உனக்கு நன்றி இருக்கிறதா? என்கிற ரீதியில் பேச, ஒரே சலசலப்பு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை ‘பேடர கண்ணப்பா’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். அப்படி இருக்கும்போது ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா? என்றார்.
நல்லா குழப்புறாங்கப்பா…ஜனங்களை!
To listen the audio click below ;-