திடீர்னு வந்து தொல்லை கொடுக்குறாங்களே? நடிகர் நகுல் அப்செட்!
ஒரு தமிழ் படத்தை எடுத்து அதை மன உளைச்சல் இல்லாமல் ரிலீஸ் செய்துவிட்டால் அந்த படக்குழுவுக்கு வடை மாலை அணிவித்து வாண வேடிக்கை போட்டுவிடலாம். ஏனென்றால், தமிழ்சினிமாவுலகம் படுகிற பாடு அப்படி. பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிற நேரங்களில் மட்டுமல்ல, வாரா வாரம் பஞ்சாயத்துதான். ‘சில பட முதலாளிகள் தங்கள் படம் வெளியாகும்போது எல்லா தியேட்டரையும் வாரி வாயில் போட்டுக் கொள்வதால், சின்னப் படம் எடுத்திருக்கும் நாங்க எங்க போய் எங்க படத்தை போடுறதாம்?’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள் பலர்.
இந்த நிலை எப்போது முடியும் என்றே தெரியாத நிலையில், இந்த வார அழுகாச்சி இது. நகுல் நடிக்கும் செய் என்ற படம் இம்மாதம் 16 ந் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதலும் வழங்கிவிட்டது. இதற்காக 150 தியேட்டர்களை இவர்கள் புக் பண்ணிவிட்டார்களாம். இந்தப்படத்துடன் ஜோதிகா நடித்த காற்றின் மொழி உட்பட மேலும் மூன்று படங்கள் வருவதாக இருக்கின்றன. இந்த நேரத்தில்தான் தீபாவளிக்கு வந்திருக்க வேண்டிய விஜய் ஆன்ட்டனியின் ‘திமிருபுடிச்சவன்’ திடீரென உள்ளே வந்துவிட்டது.
‘அதே 16 ந் தேதி நாங்களும் எங்க படத்தை வெளியிடுவோம்’ என்று ஃபாத்திமா விஜய் ஆன்ட்டனி அறிவித்துவிட்டார். இந்த பேரதிர்ச்சியை தாங்க முடியாத நகுல் புலம்பிவிட்டார் புலம்பி. இவருக்கு தியேட்டர் தருவதாக சொன்னவர்கள் இப்போது நோ தம்பி என்கிறார்களாம்.
இப்படி திடீர்னு வந்து நோகடிச்சா நாங்க என்ன பண்றது என்கிறார் நகுல். ஆனால் திமிரு புடிச்சவன் இந்த வாரம் திரைக்கு வரக்கூடாது. வந்தால் விஜய் ஆன்ட்டனி படத்தின் ஷுட்டிங்கை நிறுத்தி அவருக்கு குடைச்சல் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்கிறதாம் தயாரிப்பாளர் சங்கம்.
தடையை மீறி வருவேன் என்கிறார் ஃபாத்திமா. யாருக்கு தெம்பு என்பதை 16 ந் தேதிதான் அறிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது.
ivan padathukku theaterukku 10 per vanthale periya vishayam, Ithla 150 theaterkku current bill yevan kattarathu. tambi , seikku 30 theatere athigam.