என்னை மீறி நடிச்சுருவியா? நடிகையை விரட்டி விரட்டி கொத்தும் பார்த்திபன்!
பிளேடுகளை மடித்து வைத்த வெல்வெட் துணிதான் பலரது முகம்! அதிலும் மனித நேயத்தின் ‘ஹோல் சேல் குடோன்’ என்று நம்பப்படும் பார்த்திபனின் பிடிவாதம் ஒன்றை கேள்விப்பட்டால், நாம் முதலில் சொன்னது எவ்வளவு சத்தியம் என்பது புலப்படும்.
‘சர்வம் சுந்தரம்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார் அறிமுக நடிகை வைபவி. இவரது குலம் கோச்சாரம் எல்லாவற்றையும் விசாரித்த பார்த்திபன், தான் இயக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றில் கமிட் செய்தாராம். இந்தப்படத்தில் சாந்தனுதான் ஹீரோ. வைபவி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒன்று கூட இன்னும் படமாக்கப்படவில்லை. அதற்குள், எந்த பாம்பு தன் கோரப்பல்லை நீட்டிக் கொண்டு “கொய்யாப்பழம் சாப்ட்றியா?” என்று கேட்டுச்சோ… உஷாராகிவிட்டார் வைபவி. “ஐ எம் ஸாரி. உங்க படத்திலிருந்தே விலக்கிக்கிறேன். உங்க அட்வான்ஸ் பணத்தையும் முறையா ரிட்டர்ன் செய்றேன்” என்று கூறிவிட்டாராம்.
அதிர்ந்து போன பார்த்திபன், “அதெல்லாம் முடியாது. நடிச்சே ஆகணும்” என்று பிடிவாதம் செய்தாராம். இதுவரைக்கும் கூட ஓ.கே. இதற்கப்புறம் செய்ததுதான் இன்னும் கொடுமை. அதற்குள் வைபவி ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் கமிட் ஆகிவிட்டார். உடனே ஜி.வி.பிரகாஷிடம் பேசிய பார்த்திபன், “அந்த பொண்ணை உங்க படத்திலிருந்து நீக்குங்கள்” என்று பிரஷர் கொடுத்தாராம். அது மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்துவிட்டார்.
வேறு வழியில்லாமல் ஜி.வி.பிரகாஷ் வைபவியை தன் படத்திலிருந்து நீக்கியும் விட்டார். இப்போது வைபவிக்கு பதிலாக சுரபி நடிக்கப் போகிறார்.
மனித நேயத்தின் புனிதத் தூதர் இப்போதும் காத்துக் கொண்டிருக்கிறாராம் வைபவிக்காக!
ஐயோ பாவம் பெண்கள். அதைவிட பாவம் சினிமாவுக்கு வரும் பெண்கள்!
To listen audio click below :-
ethayo paarthu payanthurukku paccha pulla.