கமல் பற்றி கேள்வி! கடும் எரிச்சலில் கவுதமி!
பிரிஞ்சது பிரிஞ்சதுதான்… உரிஞ்சது உரிஞ்சதுதான் என்று கடும் சுணக்கம் காட்டி வருகிறார் கவுதமி. இன்டஸ்ட்ரியில் இவ்ளோ பேர் இருந்தும் கமல்ஹாசனுக்கும் கவுதமிக்கும் இடையிலான பிணக்கை சரி செய்து பிரச்சனையை தீர்த்து வைக்க யாராவது வந்தால்தானே? ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இன்னும் கமல் மீதிருந்த கோபத்தில் துளி கூட குறையாமல் இருக்கிறார் கவுதமி என்பதுதான் முக்கியமான விஷயம். சில தினங்களுக்கு முன் வந்த கமல்ஹாசன் பிறந்த நாளுக்குக் கூட கவுதமியிடமிருந்து ஒரு வாழ்த்து இல்லை.
இருவரும் பிரிந்து பல வாரங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் சூடு குறையாமல் இருக்கிறார் கவுதமி என்பதற்கு அந்த சம்பவம்தான் கடுமையான உதாரணம். ஒரு எப்.எம் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் பேட்டிக்காக அழைத்திருந்தார்கள் இவரை. சாதாரணமாக துவங்கிய பேட்டி, தெறிக்க தெறிக்க சூடானது அந்த ஒரு கணம்தான். நீங்க ஏன் கமல் சாரை பிரிஞ்சீங்க? என்று கேட்டார் ஆர்.ஜே. இதுக்கு பதில் சொல்ல விரும்பல… என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பதில் சொன்ன கவுதமி, அடுத்த கேள்வியில் படக்கென்று இடத்தையே காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அதென்ன கேள்வி.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம் தேடத் தானே?
ஏம்ப்பா இப்படி வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவுறீங்க?
https://youtu.be/nc42x7SyP-w