நடிகை பியாவுக்கு இயக்குனர் மொட்டை!
பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியிருக்கிற படம் ‘அபியும் அனுவும்’. இப்படத்தில் பியா ஹீரோயினாக நடிக்கிறார். கதாநாயகனாக பிரபல மலையாள ஹீரோ டோமினோ தாமஸ் நடிக்கிறார்.
சரிகம என்ற இசை நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றும் விஜயலட்சுமி, அதே நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் என்பதுதான் முக்கியமான செய்தி.
மிகவும் சர்ச்சைக்குரிய, ஷாக்கிங்கான ஒரு விஷயத்தைதான் படமாக்கியிருக்கிறார் விஜயலட்சுமி. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளை பார்த்த நமக்கு, அந்த ஷாக்கிங் என்ன என்பதை உணர முடிந்தது. யெஸ்… பொங்கி பொங்கி காதலிக்கும் பியா, கல்யாணத்திற்கு முன்னே கர்ப்பம் ஆகிறார். அதைவிட பெரும் கொடுமை, பியாவுக்கு கேன்சர். காதலன் என்ன செய்தான்? இதுதான் கதையாக இருக்க வேண்டும். (அப்படி இல்லாமலிருந்தால் அது விஜயலட்சுமிக்கு கதையறிவுக்கு கிடைத்த வெற்றிதான்)
கேன்சர் பேஷன்ட்டாக நடிக்க கமிட் ஆனபின், சுருள் முடியாவது… பராமரிப்பதாவது… இந்தப்படத்திற்காக மொட்டையே அடித்திருக்கிறார் பியா. பெரும்பாலும் மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோயின்கள் மொட்டையடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.