லாரன்ஸ் உள்ள வந்தார்! எல்லாம் கெட்டுச்சு! இளைஞர் போராட்டக்குழு அதிருப்தி!

இளைஞர்களும் மாணவர்களும் குழந்தைகளும் பொதுமக்களும் கொத்துக் கொத்தாக தாக்கப்பட்ட அந்த கொடூரமான நாள், மெரீனா புரட்சியின் வரலாற்றில் படிந்த அசிங்கமான கறை! அன்று இரவே புதிய தலைமுறை சேனல், இப்படி நடந்திருக்கக் கூடாதோ என்கிற நோக்கில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய போராட்டக்காரர்களில் ஒரு சிலர் கூறிய கருத்துதான் பெரிய அதிர்ச்சி.

“சார்… ஆரம்பத்தில் மாணவர்களும் இளைஞர்களும் மட்டும்தான் கூடினோம். மூன்றாவது நாள்தான் உள்ள வந்தார் லாரன்ஸ். அரசியல்வாதிகளோ சினிமாக்காரர்களோ வேண்டாம் என்று உறுதியாக இருந்தோம். ஆனால் லாரன்ஸ் எப்படியோ வந்து எங்கள் மனசை ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார். அவர் வரும்போதே உடல் நலப் பிரச்சனையால் வந்த காரணத்தால் அவருக்கு மட்டும் சேர் போட்டோம். மற்ற எல்லாரும் தரையில்தான் அமர்ந்தோம். சேர் போட்ட ஒரு காரணத்தாலேயே அவர் தன்னை தலைவராக நினைத்துக்கொண்டார். முதல் நாளிலிருந்து போராடிய பலரும் தங்கள் கருத்தை சொல்ல மைக் பிடித்தால், அவர்களை விலக சொல்லிவிட்டு இவரே பேச ஆரம்பித்தார். கடைசி நாள் தன்னிச்சையாக அவரே பிரஸ்மீட் கொடுக்கிற அளவுக்கு போய்விட்டார். இது துரதிருஷ்டவசமானது” என்றார்கள்.

அதுமட்டுமல்ல… அவசர சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட்டவுடனே கலைந்துவிடலாம் என்றுதான் கூறினார்களாம் பேராட்டக்காரர்களில் பெரும்பாலானோர். வேண்டாம் என்று அவர்களை தடுத்ததே லாரன்ஸ்தான் என்று கூறினார்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்.

இறுதியாக உறுதியாக அவர்கள் சொன்னது இதுதான். “இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் யாரையும் உள்ள விடாமலிருந்திருந்தால் மிக சரியாக இருந்திருக்கும். அவர்கள் வந்ததால்தான் எல்லாம் கெட்டுப் போனது”

இந்த ஒரு போராட்டம் சில படிப்பினையை கொடுத்திருக்கும். அடுத்த முறை சரி செய்து கொள்ளுங்கள் நண்பர்களே…

Read previous post:
தடியடி நடத்தியது சரிதான் என்று சொன்னேனா? விஷால் கடும் எரிச்சல்!

Close