அஜீத்திற்கு அவ்ளோ! நயன்தாராவுக்கு எவ்ளோ?

நாலு கிலோ தக்காளி வாங்குனா, ஒரு கிலோ சுண்டக்காய் இலவசம் என்பதை போல அமைந்ததல்ல நயன்தாராவின் சினிமா பிசினஸ். மாயா, அறம், இமைக்கா நொடிகள், என்று தொடர் ஹிட்டுகளை கொடுத்து தமிழ்சினிமா விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நாயகியாக இருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘ஐரா’ என்கிற படம்.

இதில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் அவர். இது போதாதா? அடித்துப் பிடித்துக் கொண்டு படத்தை வாங்கக் கிளம்பிவிட்டார்கள் விநியோகஸ்தர்கள். அவ்வளவு பேரும் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தை வாங்கியவர்கள் என்பது கூடுதல் தகவல். ஒன்று வாங்கினால் இன்னொரு பைக்குள்ளும் இனிப்பை நிரப்பித் தருவார்கள் என்று அர்த்தமா அதற்கு? கிட்டதட்ட அப்படிதான் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கியிருப்பவர் அறம் பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ். இவர்தான் ஐரா படத்திற்கும் தயாரிப்பாளர். நயன்தாரா கருப்பும் வெள்ளையுமாக இருக்கிற போஸ்டரை பார்த்த மாத்திரத்திலேயே இது ஷ்யூர் ஹிட் படம்தான் என்ற முடிவுக்கு வந்தவர்கள், ‘விஸ்வாசம் படத்திற்கு முன்னால வந்தாலும் சரி. பின்னால வந்தாலும் சரி. ‘ஐரா’ எங்களுக்குதான்’ என்றார்களாம்.

அஜீத்தின் படத்தை எவ்வளவு விலைக்கு வாங்கினேன் என்பதை ராஜேஷ் அறிவிக்காவிட்டாலும் இன்டஸ்ட்ரி ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறது. ஆனால் நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார். படம் எவ்வளவு விலைக்குப் போனது என்பதையெல்லாம் ரகசியமாகவே வைத்திருக்கிறார் இவர்.

‘ஐரா’ என்றால் இந்திரலோகத்து யானை என்றொரு அர்த்தம் உண்டு. இன்னொரு அர்த்தம் ‘பணக்குவியல்’ என்பதாக இருக்குமோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடு ரோட்ல வச்சு ‘கட் ’ பண்ணணும்! #metoo விஷயத்தில் வரலட்சுமி கொந்தளிப்பு!

Close