இந்திக்கு போகிறார் அஜீத்! வேலைகள் விறுவிறு…
மளமளவென வளர்ந்து கொண்டிருக்கிறது அஜீத்தின் AK 57. நாள் நட்சத்திரம் கோள் கோள்சாரம் எல்லாவற்றையும் பார்த்துதான் படத்தின் தலைப்பை அறிவிப்பார்கள். அதுவரைக்கும் படத்தின் தலைப்பை மட்டுமல்ல, ஒரு சின்ன துரும்பைக் கூட இப்போதைக்கு ரிலீஸ் பண்ண மாட்டார்கள். தப்பித்தவறி வெளிவந்த ஒரு ஸ்டில், காஜல் அகர்வால் தன் செல்போன் மூலம் எடுத்து நாட்டுக்கு பரப்பியதுதான்!
ஆனால் அவர்கள் எதையும் சொல்லாவிட்டாலும் படம் சம்பந்தமான தகவல்களை தாழ்ப்பாள் போட்டா அடைத்து வைக்க முடியும்? அதுவாக கசிகிறது. அப்படி கசிந்த ஒரு விஷயம்தான் இப்போது பரபரப்பு.
‘மங்காத்தா’ படத்தில் அர்ஜுன் வருவாரல்லவா? அப்படியொரு வெயிட்டான ரோல் இருக்கிறதாம் AK 57 ல்! அதற்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிமுகம் ஆன ஒரு இந்தி நடிகர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல, அப்படி ஒருவர் கிடைத்தால் இந்தியிலும் படத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறார்களாம். அதுவும் அபிஷேக் பச்சன் மாதிரி ஹீரோக்கள் கிடைத்தால் ரசிகர்கள் பாடு, ‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா ’ கதைதான்.
நேரடியாக அபிஷேக் பச்சனிடமே கேட்டால் என்ன என்று நினைத்த படத்தின் இயக்குனர் சிவா, இந்தி வரைக்கும் மோதிக் கொண்டிருக்கிறார். இவர் நினைப்பு சரியாக வொர்க் அவுட் ஆகிவிட்டால், அஜீத் இந்திக்குபோவதை யாராலும் தடுக்க முடியாது.
போவனும்னு நினைக்கிறவங்க மட்டும் புளிய மரத்தை சுற்றி வந்து சூடம் கொளுத்துங்கப்பா…
To Listen Audio Click Below:-
https://youtu.be/-B0ED9b7Vig