ஹன்சிகா கெஞ்சல்! மனம் இறங்கிய சிவகார்த்திகேயன்!
குவளையை தவளையாக்கும். தவளையை குவளை ஆக்கும். அப்படியொரு வல்லமை படைத்த ஒரே ஃபீல்டு நம்ம சினிமா ஃபீல்டுதான்! மான் கராத்தே சமயத்தில், ‘சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க ஹன்சிகாவை கேட்கிறாங்களாம்…’ என்று செய்தி எழுதிய நிருபர்களையெல்லாம், கழுவி கழுவி ஊற்றினார்கள் சினிமா ரசிகர்கள். “அவராவது….? இவரோடவாவது?” இதுதான் அந்த காலத்து அலம்பல் பேச்சு!
ஆனால் காலம் அப்பளத்தை திருப்பி போட்டதை போல அத்தனையையும் திருப்பி போட்டுவிட்டது. இன்று அஜீத், விஜய்க்கு அப்புறம் யார் என்றால், சிவகார்த்திகேயன் பக்கம்தான் கையை காட்டுகிறது சினிமா வியாபாரம்! மெரீனாவில் ஆரம்பித்து ரெமோ வரைக்கும் சிவகார்த்திகேயனின் எல்லா படங்களும் ஹிட் ஹிட்டோ ஹிட். இன்று அவர் யாரை கை காண்பிக்கிறாரோ… அவரே குபேரன் கோவிலின் குழிப்பணியாரம் என்கிற அளவுக்கு நிலைமை தித்திப்பாக இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் ஹன்சிகா தன் கவலையை தூக்கி சிவகார்த்திகேயன் மீது வைத்தாராம். தமிழில் ஹன்சிகா நடித்து வரும் ஒரே படம் போகன்தான். அதுவும் ஷுட்டிங் முடிந்துவிட்டது. இதற்கப்புறம் யாராவது ஹீரோ மனசு வைத்தால்தான் ஹன்சிகா ரீ என்ட்ரி ஆக முடியும். அவரோ விஜய்யின் போனுக்கே போய் வாய்ப்பு கேட்க, பார்க்கலாம்… என்று கூறி பஞ்சாயத்தை முடித்துக் கொண்டாராம் அவர். அதற்கப்புறம்தான் சிவகார்த்திகேயனின் லைனுக்கு வந்திருக்கிறார் ஹன்சிகா.
‘மான் கராத்தே’ சமயத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அழைத்தபோது, மறுக்காமல் ஓ.கே சொன்ன ஹன்சிகாவுக்கு மறு நன்றி காண்பிக்க இதுவல்லவோ தருணம்? தயங்காமல் யெஸ் சொல்லிவிட்டாராம் சிவா. பொன்ராம் படத்திலோ, அல்லது அதற்கடுத்த படத்திலோ சிவாவுக்கு ஜோடி நம்ம ஹன்சிகாதான்!
To Listen Audio Click Below:-