35 ஆண்டுகளுக்கும் மேல் நின்று விளையாடும் ரஜினி கமல்! இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் அஜீத் விஜய்?
நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த பரபரப்பு. இந்த வார விகடன், கபாலி ஸ்பெஷல் போட்டோக்களுடன் வெளிவந்திருக்கிறது.
சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி, அதே நாளின் அழகான மாலை நேரத்தில் தனது ‘தூங்காவனம்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் கமல். “நீங்கள்லாம் என்னப்பா பில்லக்கா பசங்க?” என்பதை போலவே அத்தனை பரபர ட்ரெய்லர் அது. க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்த அந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசையை அது உருவாக்க, ரஜினி கமல் இருவரும் தமிழ்சினிமாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் வருடங்களை கணக்கு போட்டு பார்த்தது மனசு! கிட்டதட்ட 35 வருடங்களை தாண்டிப் போய் கொண்டிருக்கிறது.
கைகளால் படம் வரைந்து அதையே பேனர்களாக வைத்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த அவர்களது வேகமான பயணம், இதோ போட்டோ ஷாப், இல்லஸ்ட்டிரேட்டர், அதற்கப்புறமான கம்ப்யூட்டர் காலத்திலும் அதே வேகத்தோடு எதிர்பார்க்கப்படுவதும், தொடர்வதும் ஆச்சர்யமில்லாமல் வேறென்ன? இன்று ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொழுதை கழித்துக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் கமல் ரஜினி வயசையொத்தர்வர்கள் அல்ல. ஆனால் நேற்று அத்தனை வலை(தளங்)களும் பிய்ந்தே போயிருக்கும்! எல்லாம் ரஜினி கமல் ஹீரோவாக நடிக்க வந்த காலத்தில் கருவாக கூட உதயமாகியிருக்காத வாலிப வகையறாக்கள்! ஊடுறுவல் என்பது இப்படியல்லவா இருக்க வேண்டும்?
இவ்வளவு தெளிவாக ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணிக் கொண்டிருக்கும் ரஜினி கமல் திட்டமிடல், அதற்கப்புறம் வந்த பப்பர்மென்ட் ஸ்டார்களிடம் இருக்கிறதா? ஹைய்யோ ஹைய்யோ…! அஜீத் நடித்து வரும் ஒரு படத்தின் ஷுட்டிங் ஏறத்தாழ முடிந்தே போய்விட்டது. இன்னும் தல 56 என்றே எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதில் கூட இத்தனை குழப்பம். போராட்டம். படப்பிடிப்பு முடிந்ததா? இன்னும் இருக்கிறதா? எது பற்றியும் விரிவாக பேசக் கூட முடியாதளவுக்கு பிளாஸ்திரியும் பூட்டுமாக திரிகிறார் அப்படத்தின் டைரக்டர் சிறுத்தை சிவா. விதி எண் 110 ன் கீழ் படத்தின் தயாரிப்பாளரே வாய் திறந்தால்தான் உண்டு போலிருக்கிறது. சரி… அவர்கள் குழப்பம் அவர்களுக்கு.
விஜய் நிலைமை என்ன?
புலியின் ரிலீஸ் தேதி ஒரு முறை வெளிப்படையாகவும், இன்னொரு முறை ரகசியமாகவும் மாற்றியாகிவிட்டது. ஏகப்பட்ட தொடை நடுங்கலோடு, ‘இந்த முறை பிழைச்சுப் போறேன். என்னைய விட்ருங்கம்மா’ என்று கதறாத குறையாக ஒரு போஸ்டர். ‘நடிகர் திலகம் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டும் தமிழக அரசுக்கு நன்றி. சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1 முதல் உலகமெங்கும் வெளியீடு’ என்ற அறிவிப்போடு ஒரு விளம்பரம் தயாராகி கடைசி நேரத்தில் அந்த வாசகங்களையெல்லாம் நீக்கி விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு பெரும் குழப்பம்!
இன்னும் பத்தாண்டுகளானாலும், ரஜினியும் கமலும்தான்யா உங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம்! நள்ளிரவிலாவது களவாடிடணும் என்று நீங்கள் இருவரும் நினைக்கிற அந்த நாற்காலிகள்…? அதுபாட்டுக்கு அவர்களிடமே இருக்கட்டும். அதற்கு தகுதியான ஆட்கள் நீங்கள் இல்லை!
இந்த வயதில் என் தலைவரின் கம்பீரம் வியக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள் தலைவா.
LONG LIVE OUR GOD SUPER STAR RAJINI
ஒவ்வொரு ஸ்டில்லும் அருமை. தலைவர் ரஜினி கலக்க ஆரம்பித்து விட்டார்.
(எதிரிகள் ஜாக்கிரதை)
தலைவரின் வெற்றி இன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது.
தமிழர்களின் காவலாளி எங்கள் கபாலி.
RAJINI YEPPAVUME TOP SUPER STARTHAN… THALAIVAR MATTUMTHAN ONE AND ONLY SUPER STAR.. YELLA THALAMURAKKUM….
Innum yethanai kaalam aanalum thalaivar thaan super star
enrume engal thalaivar rajini than super star
Semaya sonnenga Ji ..Thanks … thalaiva u r great .. kabali