உடனடி ஆபரேஷன்! மருத்துவமனையில் அஜீத்! Exclusive
எண்ணிலடங்கா ஆபரேஷன். ஆங்காங்கே இரும்புத் தகடுகள் என்று சற்றேறக்குறைய ஒரு இரும்பு மனுஷனாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார் அஜீத். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வரும் மிக மிக ரிஸ்கான காட்சிகளை கூட, டூப் இல்லாமல் நடித்துவிட வேண்டும் என்கிற வெறி அவருக்கு உண்டு. அதன் காரணமாக வந்த இருப்பு பிளேட்டுகள்தான் இவையெல்லாம்.
விவேகம் படத்திற்காக அஜீத் எடுத்துக் கொண்ட ரிஸ்க் அளவுக்கு அதிகமானது. ‘மேக்கிங் ஆஃப் விவேகம்’ என்ற தலைப்பில் பல்கேரியாவில் எடுக்கப்பட்ட ரிஸ்க் காட்சிகளை தனியாக தொகுத்து வெளியிட்டால் கூட விவேகம் பட வசூலில் பாதியை கல்லா கட்டிவிடலாம். (எதுக்கும் யோசிங்க சத்யஜோதி)
படப்பிடிப்பில் எவ்வளவு வலியை பொறுத்துக் கொண்டு நடித்தாரோ, அவ்வளவுக்கும் சேர்த்து சென்னையில் வைத்து பின்னி எடுத்துவிட்டதாம் உடம்பு. தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த அடி, மெல்ல வீரியமாகி ஆபரேஷன் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது.
அஜீத்தை சோதித்த மருத்துவர் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட, நேற்று நள்ளிரவு சென்னையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நன்கு தேர்ந்த மருத்துவர்களை வெளி மருத்துவமனையிலிருந்து வரவழைத்து இந்த ஆபரேஷனை செய்து முடித்தார்களாம்.
ஆபரேஷனுக்கு முன்பும் சரி. பின்பும் சரி. வழக்கம் போல அஜீத் கூல் என்கிறது மருத்துவமனை வட்டாரம்.
https://www.youtube.com/edit?o=U&video_id=5vc4NlL1EYU
தமிழ் மக்களுக்கு ஒரு பைசாவுக்கு ப்ரோயோசனம் இல்லதா சுயநலம் கொண்ட இவன் ஆபரேஷன் பண்ணுனா என்ன இல்ல பன்னாட்டி என்ன. நாம ஓலைச்சா தான் சோறுடா.