நடிகர் சங்க தேர்தலை அஜீத் புறக்கணித்த பின்னணி இதுதான்!

ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனது ஏன்? இது குறித்துதான் திரையுலகம் பரபரப்பாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

நேரம் செல்ல செல்ல அஜீத் வருவார் வருவார் என்று காத்திருந்த பொதுமக்களுக்கும் மீடியாவுக்குமே நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் “அஜீத் ஓட்டுபோட வருவாரா?” என்று அவரது மக்கள் தொடர்பாளரிடம் விசாரித்தபடியே இருந்தார்கள். மாலை 4 மணி சுமாருக்கு அவர் வருவார் என்று நம்பகமான தகவல்களும் பரப்பப்பட்டன. ஆனால் கடந்த வாரமே இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டாராம் அவர். நடிகர் சங்கத்தின் மீதும், சக நடிகர்கள் மீதும் கடும் கோபத்தில் அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏன் அந்த கோபம்?

எல்லாம் அந்த “மிரட்றாங்கய்யா…” விவகாரம்தான்! திமுக ஆட்சியிலிருந்த போது கலைஞர் கருணாநிதி முன்னிலையிலேயே திரையுலக அமைப்புகள் மீது பகிரங்க குற்றத்தை சுமத்தினார் அஜீத். அப்போது “ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களா விரும்பி வர்றது வேற. வந்துதான் ஆகணும்னு மிரட்றது வேற. நாங்க வரலேன்னா எங்களை மிரட்றாங்கய்யா…” என்றார் அஜீத். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த ஆடியன்சும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ரஜினிதான் முதலில் எழுந்து கைதட்டவே ஆரம்பித்தார். ஆனால் அதற்கப்புறம் வந்த நாட்கள் எதுவும் அஜீத்திற்கு நிம்மதியானதாக இருக்கவில்லை.

ஏகப்பட்ட மிரட்டல்கள். நேரிலும், போனிலுமாக அவரை மிரட்டிக் கொண்டேயிருந்தார்கள். அப்போது ரஜினியை தவிர ஒருவரும் அஜீத்திற்கு ஆறுதல் சொல்ல முன் வரவில்லை. நேரடியாக கலைஞரிடம் அஜீத்தை அழைத்துச் சென்று பிரச்சனையில் இருந்து அவரை காப்பாற்றியதும் ரஜினிதான். இதே நடிகர் சங்கமும், அதன் செயலாளர் ராதாரவியும் அஜீத்திற்கு பக்கபலமாக இல்லாமல் தன் பங்குக்கு அவர்களும் இரண்டு கல்லை தூக்கிப் போட்டதாக கூறுகிறார்கள். சக நடிகர்களும் இளம் நடிகர்களும் கூட அஜீத்திற்கு ஒரு போன் செய்து விசாரிக்கவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த தேர்தலை அவர் புறக்கணித்ததாக கூறுகிறார்கள்.

நாம் சில தினங்களுக்கு முன்பு எழுதியிருந்ததை போல, இன்று கலாஷேத்ராவில் நடைபெறும் தன் மகள் அனோஷ்காவின் நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டாராம் அஜீத்.

அஜீத்தின் இந்த தேர்தல் புறக்கணிப்பு கடும் விமர்சனத்திற்கு ஆளாகும் என்பதுதான் பத்திரிகையாளர்களின் இப்போதைய கணிப்பு!

9 Comments
 1. தமிழ் குமரன் says

  இவன் ஒரு மலையாளி. தமிழின துரோகி. திரு. விஷால் அவர்கள் இவன் மீது சங்க அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். ஒரு நடிகத்தில் தேர்தல். அதில் ஜனநாயக கடமையை கூட செய்யாதவன் இந்த தருதல. இனி மேலாவது மானமுள்ள தமிழர்கள் இவன் படத்தை புறக்கணிக்க வேண்டும்.
  வாழ்க தமிழ்! வெல்க தமிழ்! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

   //இவன் மீது சங்க அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்//

   எந்த சட்டப் பிரிவின் கீழ் bro?

 2. Balaji says

  He is always lethagic about cinema issues. Coz he has a strong fanbase and doesnt care about anything. But people always praising ajithkumar as thala. Nobody knows what he is thinking. He is not at all participating in his film promos and other functions. I think in tamil cinema, He is the most overrated person. I really hates ajith. Really…

 3. RAGHURAMAN says

  சப்பை கட்டு கட்டக் கூடாது. தான் சார்ந்து இருக்கும் ஒரு சங்கத்திற்கு ஒரு தேர்தல் வருகிறது. வாக்கு அளிக்க வக்கு இல்லை. இவனெல்லாம் ஒரு நடிகனா ?? இவனை சொல்லி குற்றம் இல்லை. இவன் பின்னால் ஒரு தருதல கும்பல் ஒன்று சுற்றுகிரதெ அவர்களை சொல்ல வேண்டும். தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்ன என்று அறியாத மலையாளி.

 4. Vivek says

  If Ajith malayali.. Then who’s rajini and vishal?
  What’s your problem if he doesn’t participate in his movie promo?
  Every producers know that when making agreement..they accept and book him for their movies.
  He gets his salary in cheque and deposits it in bank only.As a true citizen it’s one of his contribution to this nation.
  He’s clear in his matters..
  He gave money (7.5lakhs) to the artist association when it was in loss..where did the association went when he suffered with karunanidhi issue?
  அவரது தகுதி, நல்மனம் ஆகியனவற்றை குறை கூற எவனுக்கும் தகுதி யில்லை…

 5. தமிழ் அறிவாளன் says

  இந்த மலையாளி அஜித்தை தமிழ் சினிமாவை விட்டு அடித்து துரத்த வேண்டும். அனைத்து ஊடகங்களும் இவன் பற்றி செய்திகளை வெளியிட வேண்டாம். உண்மை தமிழர்கள் இவன் படத்தை புறக்கணிக்க வேண்டும்.
  இவனை ஆதரிப்பவர்கள் தமிழின துரோகிகள். இவன் படத்தை இனி மேலும் பார்ப்பவகள் தமிழர்களே கிடையாது.

 6. மரபின் மைந்தன் says

  உண்மையான தமிழர்கள் இந்த மலையாளி அஜித் படத்தை புறக்கணிக்க வேண்டுகிறோம்

 7. forex says

  Excellent article! We are linking to this particularly
  great content on our site. Keep up the good writing.

 8. Hi there, I discovered your blog by means of Google whilst looking for a comparable topic, your web site got here up, it
  seems great. I have bookmarked it in my google bookmarks.

  Hi there, simply became aware of your weblog through Google, and found
  that it’s really informative. I am going to be careful for brussels.
  I’ll be grateful if you continue this in future.
  Numerous folks might be benefited out of your writing.
  Cheers!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sakshi Agarwal Actress Stills

Close