அஜீத் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அட்லீ!
வேதாளம் படத்தின் ட்ரெய்லரில் “தெறிக்க விடலாமா?” என்று அஜீத் டயலாக் பேசிய பின்புதான், தான் இயக்கிய விஜய் படத்திற்கு தெறி என பெயர் சூட்டினார் அட்லீ. இது எதார்த்தமாக நடந்ததாகதான் அப்போது பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் விடுகதை அட்லீ வாயாலேயே அவிழ்க்கப்பட்டுள்ளது இப்போது.
எப்படி?
“விஜய் 61 படத்தின் தலைப்பை எப்ப சார் வெளியிடுவீங்க?” என்று அவரது ட்விட்டர் அக்கவுன்டுக்கு வந்து பல நூறு ரசிகர்கள் கேள்வி எழுப்ப…. “விவேகம் ட்ரெய்லர் வரட்டும். வெயிட் பண்ணுங்க” என்றார் அவர். அவ்வளவுதான்…. போட்டு வறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும்.
ஏண்டா பதில் சொன்னோம் என்கிற அளவுக்கு படு சோகத்தில் ஆழ்த்திவிட்டார்கள் அவரை. இருந்தாலும், விவேகம் ட்ரெய்லரிலிருந்துதான் ஒரு வார்த்தையை எடுத்து வைக்கப் போகிறார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்.
எப்படியிருந்தாலும் திட்டு நிச்சயம்!
https://www.youtube.com/watch?v=W0YiQqRAv1Q&feature=youtu.be