எண்ணிக்கை முக்கியமில்ல எண்ணம்தான் முக்கியம்! அஜீத் ரசிகர்கள் சப்பைக்கட்டு!

எந்த பேரிடர் வந்தால் எனக்கென்ன என்று வீட்டிற்குள்ளேயே தியானம் செய்யும் நடிகர்களில் அஜீத் எப்பவுமே டாப்! சென்னை வெள்ளத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் களத்தில் இருந்தபோது, கப்சிப் ஆகி கல்லாபெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிய அற்புத மனிதர். அவர் இடது கைக்கு தெரியாமல் 100 கோடி கொடுத்தார், 1000 கோடி கொடுத்தார் என்று அளந்துவிட்டது அவரது ரசிகர் கூட்டம்.

அப்போது மட்டுமல்ல, போட்டோஷாப்பில் விதவிதமாக பில்டப் காட்டுவதில் வல்லவர்களான அவர்கள், இந்த கஜா புயலுக்கும் அப்படியொரு டிசைன் செய்து அமர்க்களப்படுத்தினார்கள். இருந்தாலும் அவர் மீது நிஜமான அக்கறை கொண்ட ரசிகர்கள் மட்டும், ‘ஏன் இன்னும் தல வாயை திறக்கல?’ என்று கவலை கொண்டார்கள். ஆனால் மற்ற ஹீரோக்கள் சைடிலிருந்து பொருள் வரத்து கூடியது. கமல் தரப்பிலிருந்து சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. ரஜினி தரப்பிலிருந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் போய் சேர்ந்தது. அவை முறையே இருவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் களத்தில் விநியோகம் செய்யப்பட்டன.

விஜய் 40 லட்ச ரூபாயை தன் ரசிகர் மன்றத்தினருக்கு நேரடியாக வங்கியில் செலுத்தி உதவ செய்தார். பலமுறை கதவை தட்டி ஓய்ந்த பின், அஜீத் தரப்பிலிருந்து ஒரு பதிலும் இல்லை. சைலன்ட்டாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 15 லட்சத்தை அனுப்பிவிட்டு அமைதியாகிவிட்டார். இந்த தொகையை வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்று அவரது தரப்பினர் சும்மாவே இருந்து விட்டனர். ஆனால் தல எப்பவும் கொடுத்ததை சொல்ல மாட்டார் என்று இதற்கும் ஜிங் ஜக் ஆனது ரசிகர் கூட்டம்.

ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 35 கோடி வரை சம்பளம் வாங்குகிற அஜீத், இவ்வளவு சிறிய தொகையை வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக கம்மென இருக்கிறார்கள் பலர்.

ஆனால் வெறிபிடித்த சில ரசிகர்கள் மட்டும், நேற்றிலிருந்து ஒரு வாசகத்தை பிரபலப்படுத்தி வருகிறார்கள். அது இதுதான்-

எண்ணிக்கை முக்கியமில்ல
எண்ணம்தான் முக்கியம்!

உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையாப்பா?

பின்குறிப்பு- எவ்வித மார்க்கெட் பலமும் இல்லாத, அநேகமாக சினிமாவிவிலிருந்தே ரிட்டையர் ஆகிவிட்ட நடிகை கஸ்தூரியே 12 லட்ச ரூபாய் உதவி செய்திருக்கிறார். ஒரு தகவலுக்காக-

Read previous post:
பேட்டய கை மாத்தாதீங்க! சன்னிடம் போராடும் தயாரிப்பாளர்!

Close