தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்?
தானே புயல், வர்தா புயல், கஜா புயல் மூன்றும் ஒரே நாளில் அடித்தால் கூட இவ்வளவு சலசலப்பும் பரபரப்பும் இருந்திருக்காது… ‘பேட்ட’ ட்ரெய்லரும் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரும் அடுத்தடுத்த தினங்களில் வெளியிடப்பட்டதால் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது ஊர் உலகம்!
பிரச்சனை வெறும் ட்ரெய்லர்கள் அல்ல. அதில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள். பேட்ட ட்ரெய்லர்தான் முதலில் வெளியானது. ‘ஏய் எவனுக்காவது பெண்டாட்டி, குழந்த குட்டின்னு சென்ட்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிடு. கொல காண்டுல இருக்கேன். கொல்லாம விட மாட்டேன்’ என்று அதில் ரஜினி பஞ்ச் அடித்தார்.
பின்னாலேயே வந்த விஸ்வாசம் ட்ரெய்லர் பேட்ட யில் பேசிய ரஜினிக்கு பதில் சொல்வது போலவே அமைந்திருப்பதுதான் ஷாக். ‘பேரு தூக்கு துரை, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா’ என்கிறார் அஜீத்.
இது ஏதோ எதார்த்தமாக அமைந்ததா என்றால் அதுதான் இல்லை. இந்த பேட்ட ட்ரெய்லருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே விஸ்வாசம் க்ளைமாக்சில் வருகிற வசனத்தையும் இந்த ட்ரெய்லரில் இணைத்தாராம் டைரக்டர் சிவா. அதுமட்டுமல்ல, படத்தில் கொசு பறந்தால் கூட அது அஜீத் சம்மதிக்காமல் நடக்காது என்கிறார்கள் படத்தில் உழைத்த தொழிலாளர்கள்.
இந்த ட்ரெய்லரும் அஜீத்தின் ஒப்புதலுக்குப் பின்தான் வெளியிடப்பட்டுள்ளதாம். ட்ரெய்லரில் என்னென்ன வசனங்கள் இடம் பெற வேண்டும் என்பதை அஜீத்திடம் டிஸ்கஸ் செய்துதான் இந்த ட்ரெய்லரை உருவாக்கியிருக்கினாராம் சிவா. இதையெல்லாம் கமுக்கமாக விவாதித்து வரும் திரையுலக டெக்னீஷியன்கள் அஜீத் இப்படி செய்திருக்கக் கூடாது என்று அந்த விவாதத்தை முடிப்பதுதான் பேரதிர்ச்சி.
இது குறித்து திரையுலக பிரமுகர்கள் பேசிவருவதை இங்கு அப்படியே பதிவிட்டால் குழப்பம் தீரும்.
பில்லா படத்தின் செகன்ட் பார்ட் வருவதில் ரஜினியின் உற்சாக ஒப்புதல் அதிகம் உண்டு. அன்று மட்டும் பில்லா 2 க்கு அஜீத் முட்டுக்கட்டை போட்டிருந்தால், சற்றே வில்லத்தனம் கலந்த அஜீத்தை அடுத்து வந்த மங்காத்தாவில் பார்த்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல, அஜீத்தின் மார்க்கெட்டை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு போன பங்கு பில்லாவுக்கும் மங்காத்தாவுக்கும் உண்டு.
அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் அஜீத் பேசிய ‘மிரட்றாங்கய்யா’ சொற்பொழிவு திமுக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அஜீத்துக்கு நிறைய போன் மிரட்டல்களும் வந்தன. ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை அவர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை சில நாட்கள் நீடித்தது. அப்போது மட்டும் ரஜினி அந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்திருந்தால், சில அசம்பாவிதங்களும் நடந்திருக்கலாம். அப்படியெல்லாம் அஜீத்தை காப்பாற்றியவருக்கு அவரே செய்யும் நன்றிக்கடனா இது? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் இங்கே.
என்னதான் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்கிற வியாக்யானங்கள் எழுந்தாலும், பேட்ட விஸ்வாசம் ஒரே நாளில் ரிலீஸ் என்கிற முடிவை தொடர்ந்து வரப்போகிற சலசலப்பு அஜீத் ரஜினி நட்புக்கு இடையே சீறிக் கொண்டு எழும் நாகப்பாம்பு போன்றதுதான்.
விஷத்தை கக்க வேண்டிய அவசியமே இல்லாமல் விஷம் கக்கப்பட்டு விட்டதே என்கிற கவலைதான் இரு தரப்பு விரும்பிகளுக்கும் இப்போது!
ஆனா ரஜினி தரப்பு தானே அஜித் படத்தை வம்புக்கு இழுக்கறாங்க ? விஸ்வாசம் தான் முதலில் முடிவானது. பொங்கல் ரிலீஸ் அப்படின்னும் ஏற்கனவே முடிவு செய்யப்பட ஒன்னு. திடீர்னு நாங்களும் பொங்கலுக்கு தான் வருவோம் – னு வம்படியா ரிலீஸ் செய்றது மட்டும் இல்லாம ஏடாகூடமான வசனங்களை வெச்சி ட்ரெய்லர முதல்ல ரிலீஸ் செய்ததும் ரஜினி தரப்புதான்.
பொங்கல் தேதி வேணும்னா சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கலாம். ஆனா ட்ரெய்லர்ல வந்த வசனங்கள், காட்சிகள் ரஜினியின் ஒப்புதல் இல்லாம இடம் பெற்றிருக்குமா ? அப்புறம் எப்படி அஜித்தை மட்டும் தப்பு சொல்றிங்க ?
?எங்க #தலைவருக்கு முன்னாடி நீங்க #Viswasam எல்லாம் பால்வாடி பாய்ஸ் டா ?? #PettaTrailer #Petta #Rajinikanth #PettaJan10thParaak #PettaPongalParaak
மத்தவங்க சொல்றாங்களா இல்ல நீங்க சொல்றீங்களா…உங்களுக்கு அஜித் என்றாலே ஆகாது….நீங்களே உங்க பழைய கட்டுரையை பாருங்க…”அஜித்துக்கு பொங்கல், விஜய்க்கு தீபாவளி னு நீங்கதானே எழுதிநீங்க….நானும் ரஜினி ரசிகண்தான், இதில் முழுக்க முழுக்க ரஜினி மற்றும் சன் தொலைக்காட்சி தவறுதான்….அஜித் மீது எந்த தவறும் இல்லை… விவேகம் அதிகம் லைக் வங்கினதுக்கு, அம்பானிக்கு நன்றி சொல்லணும்னு சொன்னவர் தானே நீங்க….
ரஜினியை தோற்கடிக்க நினைச்ச நிறைய பேரு இன்னைக்கு சினிமா பீல்டிலயே இல்லை யாரையும் அழிக்க நினைச்சது இல்லை,அதனால தான் அவர் டாப்புல இருக்காரு அவர் நடிக்கிற வரைக்கும் அவர் தான் இங்க ராஜாதி ராஜா பாக்க தானே போறிங்க காளியோட ஆட்டத்த