இதுதான் விஸ்வாசம் கதை!

‘இந்த முறையாவது எங்க தலைய சிவா காப்பாத்திடணும்’ என்று பிரார்த்தனை கிளப் ஆரம்பித்து இருபத்திநாலு மணி நேரமும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். வீரம், வேதாளம் என்று கொடி நாட்டிய சிவா, அதற்கப்புறம் விவேகத்தில் கொடியை தலை கீழாக நாட்டியதை கண்டு கொந்தளிக்காத ரசிகர்களே இல்லை. அப்படியிருக்க… நாலாவது முறையும் தலைவரு ஏன் இப்படி பண்றாரு என்கிற அதிர்ச்சியும் எழுந்தது அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் ஃபர்ஸ்க் லுக், செகன்ட் லுக் என்று படுத்தி எடுத்தார் சிவா. எப்படியோ, மூன்றாவதாக அவர் தந்த ட்ரெய்லர்தான் டாக் ஆஃப் த டமில் தேசம்! பிச்சு பெடலெடுத்துட்டார்… என்று வாய் கொள்ளா சந்தோஷத்தோடு ட்ரென்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். யு ட்யூப்-ல் தொடர்ந்து இரண்டு நாட்களாக விஸ்வாசம் ட்ரெய்லர்தான் டாப். (நாலு நாளைக்குப்பின் இப்போதுதான் இரண்டாவது இடத்தை தொட்டிருக்கிறது பேட்ட. இது தனி குழப்பம்)

ட்ரெய்லரை போலவே படமும் இருந்தால், இந்த ஹிட்டை எவனாலும் தடுக்க முடியாது என்று ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று நாலாபுறமும் வலையை வீசினால், நல்ல திமிங்கலமே சிக்கிவிட்டது. யெஸ்… விஸ்வாசம் கதை என்று இன்டஸ்ட்ரியில் சொல்லப்படுகிற கதை இதுதான்.

தேனியில் பெரிய தாதா அஜீத். வெட்டி வம்புக்குப் போகாமலும் அதே நேரத்தில் வந்த சண்டையை விடாமலும் காலத்தை தள்ளுகிற அவருக்கு மனைவியின் பிரசவ நேரத்தில் கூட அருகில் இருக்க முடியாதளவுக்கு சுச்சுவேஷன். என்ன? தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை வருகிறது. அடித்து துவைத்துவிட்டு ஆஸ்பிடல் வருவதற்குள் அத்தனை சந்தோஷமும் குளோஸ்.

பிரசவத்தில் குழந்தை இறந்துவிடுகிறது. கண்கலங்கும் நயன்தாரா அஜீத்தை பிரிந்து எங்கோ சென்று விடுகிறார். மனைவியை மீண்டும் 12 வருஷம் கழித்து மும்பையில் சந்திக்கும் அஜீத், இறந்து போய்விட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு சந்தோஷப்படுகிறார்.

விளையாட்டில் சுட்டியாக இருக்கும் மகள், பெரிய காம்படிஷனில் கலந்து கொள்கிற சூழலில் வில்லனின் மகளும் அதே கேம்-ல் போட்டி மாணவியாக களம் இறங்குகிறார். வேறு வழியில்லை. அஜீத் மகளை கொன்றுவிட்டால் தன் மகளுக்கு வெற்றி உறுதி என்று நினைக்கும் வில்லன் அதற்கு முயல, அப்பா அஜீத் என்ன செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இந்த சின்னக் கதைக்குள்தான் தன் மேஜிக்கை சுட சுட நிகழ்த்தியிருக்கிறாராம் சிவா.

ஷியூர் ஷாட்னு சொல்லுங்க!

Read previous post:
தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்?

Close