விஸ்வாசத்தைப் போட்டுத்தள்ள ரஜினி ரசிகர்களுடன் கை கோர்க்கிறாரா விஜய்?
டவுட்டும்மா டவுட்!
சோஷியல் மீடியாவில் எது வந்தாலும், காதுகளை பொத்திக் கொண்டு கம்மென்று இருப்பதுதான் அஜீத் விஜய் இருவரது வழக்கம். முக்கியமாக ட்விட்டரில் மோதிக் கொள்ளும் தங்களது ரசிகர்களை ‘மூடுங்கப்பா கொஞ்ச நேரம்…’ என்று சொல்லவே மாட்டார்கள். யாராவது சிக்கினால் சிக்கியவர்களின் இமேஜை இழுத்துப்போட்டு சவட்டி எடுப்பது இவ்விரு ரசிகர்களின் பொழுதுபோக்கு.
சமீபத்தில் அஜீத் ரசிகர்களிடம் சிக்கி, ஆதியோடு அந்தமாக அசிங்கப்பட்டு நிற்கிறார் நடிகை கஸ்தூரி. ‘முதல்ல உங்க ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லுங்க அஜீத்’ என்று கூப்பாடு போட்டு பார்த்தாலும், கஸ்தூரியின் கதறல் அஜீத்தின் பண்ணை வீட்டு காம்பவுன்ட் சுவரைக் கூட தொட்டுப் பார்க்கவில்லை.
இந்த நிலையில்தான் ‘விஸ்வாசம்’ படத்தை விட்டுக் கிழிக்க கிளம்பியிருக்கிறது விஜய் படை. போதாத குறைக்கு விஸ்வாசம் வருகிற அதே நாளில் ரஜினியின் பேட்ட படமும் வருவதால் ரஜினி ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் விஸ்வாசத்தை ரவுண்டு கட்டுகிறார்கள். அஜீத் ரஜினி ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்கள். நம்ம சப்போர்ட் யாருக்கு என்று முடிவெடுப்பதில் சுணக்கம் காட்டியவர்களுக்கு நேற்று விஜய் தரப்பிலிருந்து வந்திருக்கும் ஒரு செய்தி ஒரு க்ளீன் ரூட்டை காட்டியிருக்கும்.
விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பி.டி.செல்வகுமார் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் ரஜினியை விஜய் முந்திவிட்டதாக கூற… நாடெங்கும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். வழக்கம் போல கம்மென இருந்திருக்க வேண்டிய விஜய் அடித்துப்பிடித்துக் கொண்டு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !
இருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
அதோடு, நமது தளபதி விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இவன்
Bussy N Anand
(பொறுப்பாளர்)
இதுதான் விஜய் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் விளக்கக்கடிதம்.
இதன் மூலம் அவர் சமூகத்திற்கும் தன் ரசிகர்களுக்கும் உணர்த்துவது என்ன? விஸ்வாசம் வருகிற இந்த நேரத்தில் நாம் மோத வேண்டியது ரஜினியிடம் அல்ல என்பதைதான்.
புரிஞ்சுருச்சா ஃபேன்ஸ்!?
டேய், முட்டாள்…..
எங்கள் தலைவருக்கு எதிரியே கிடையாதுடா. உங்களை போன்ற சில துரோகிகள் தான் அவரை எதிர்த்து இது போல பதிவுகள் போடும்,. போங்கடா டேய்.
ஆண்டவனே எங்கள் பக்கம் டா.
பேட்ட பராக் பேட்ட பொங்கல்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேட்ட படம் மாபெரும் வெற்றி அடைந்து வசூலில் புதிய சாதனைகள் பல படைக்க இருக்கிறது,.
வாழ்க மனித புனிதர் ரஜினி அவர்கள்.