அறம் கோபி டயலாக்கில் அஜீத்! இனி வேற லெவல் பாலிடிக்ஸ்!

ஜெயலலிதா அப்போலோ வில் சேர்வதற்கு முன் ரஜினிக்கும் கமலுக்கும் ஒரே எண்ணம்தான் இருந்திருக்கும். அது? ‘சினிமாவில் இப்போது இருக்கிற டாப் இடத்தை பாதுகாத்துக் கொள்வது எப்படி?’ என்பது. ஆனால் சோழியை உருட்டி வீசியதில், ரஜினியும் கமலும் உசுப்பப்பட்டு வெளியே வந்திருக்கிறார்கள். இந்த உசுப்பல் ரஜினி கமலோடு நின்று விடுமா? அஜீத் விஜய்யை பதம் பார்க்காதா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரு முன்னோட்டமான பதில்தான் அறம் கோபியும், அஜீத்தும் இணைவது. மீஞ்சூர் கோபி, கோபி நயினார், அறம் கோபி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், சமூக கருத்துக்களை தன் படங்களில் பேசுகிற விதத்தில் அவர் எப்போதுமே நெருப்பு கோபி.

அறம் படத்தில் நயன்தாராவுக்கு வேறொரு இமேஜை ஏற்படுத்தித் தந்தவர்கள் என்பதோடு, படத்தில் அவர் பேசியிருக்கும் கருத்துக்களும் எழுத்துக்களும் அவ்வளவு பலம் வாய்ந்தவை. என் பாணி இதுதான். நான் இனிமேல் இயக்கப் போகிற எல்லா படங்களிலும் மக்களுக்கான கருத்துக்கள்தான் இருக்கும் என்று பேசி வருகிறார் கோபி.

அறம் தயாரிப்பாளர் ராஜேஷ் தயாரிப்பில் அஜீத் நடிக்கப்போகும் படம் கிட்டதட்ட முடிவாகிவிட்டது. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இதில்தான் அறம் கோபியை டயலாக் எழுத வைத்திருக்கிறார் ராஜேஷ். தன் நெருப்பு வார்த்தைகளால் அஜீத்தை அரசியல் பக்கம் இழுக்கவும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

சும்மாவே நெருப்பு. அதை அஜீத் பேசினா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காட்டுமிராண்டித்தனம்! எச்.ராஜாவுக்கு ரஜினி சுளுக்கு!

Close