அடிவாங்கினாரா அஜீத்? அன்று நடந்தது என்ன?

அண்டசராசரமே அதிரும்படி பொய் சொல்வதில் டாக்டரேட் வாங்கிவிடுவார்கள் போலிருக்கிறது நெட்டிசன்கள். கடந்த சில தினங்களுக்கு முன் வாக்கு சாவடிக்கு வந்த அஜீத்தை யாரோ பின் புறமாக தாக்குவது போல ஒரு வீடியோவை வெளியிட்டு மகிழ்ந்தது ஒரு கூட்டம். பங்கு மார்க்கெட்டில் கூட இத்தனை ஷேர் இருக்காது… ஆனால், இந்த வீடியோ ஷேர் மீது ஷேர் வாங்கியது.

சவுண்ட் எபெக்ட்டில் டிஸ்டிங்ஷன் வாங்கிய யாரோ என்று விஷமிதான் இந்த வீடியோவை உருவாக்கியிருக்க வேண்டும். அஜீத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்தில் அவருக்கு நெருக்கமாகவே வந்த ஒரு போலீஸ்காரரின் கைதான் அது. அந்த கை அஜீத்தின் தலைக்கு அருகாமையில் வருகிற போதெல்லாம் அடி விழுகிற சவுண்ட் போட்டு ஆனந்தப்பட்டிருக்கிறார் அந்த விஷமி.

‘அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு’ என்று இந்த சம்பவத்திற்கு பிஜிஎம் வேறு போடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ அஜீத்தின் பார்வைக்கும் சென்றதாம். அதை சற்று நேரம் உற்றுப் பார்த்தவர், ஒரு புன்னகையுடன் கொடுத்தவர் கைக்கே திருப்பிக் கொடுத்ததாகவும் தகவல்.

ஆனால் ஓட்டுப் போடும் கடமையை சரியாக செய்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு மனுஷன் அவர். ஆனால் அவரை இப்படி பிய்ச்சு போட்ட கோழி இறக்கை மாதிரி ஆக்கத் திரிந்த அவரது ரசிகர் கூட்டமே, அவருக்கு இப்படியொரு அவமானத்தையும் தேடித் தந்திருக்கிறது. இதில் மீடியாவின் பங்கும் இருந்ததுதான் கொடுமை.

கிளின்ட்டன், ஜார்ஜ் புஷ்களே கூட கூட்ட நெரிசலில் சிக்காமல் வந்து ஓட்டு போட்டுவிட்டு போகிறார்கள். ஆனால் நடிகர்களுக்குதான் அந்த கொடுப்பினை இல்லை. ஒரு காலத்தில் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்துக்கு, இன்று காரை விட்டு கூட நிம்மதியாக கீழே இறங்கி கால் வைக்க முடியாதளவுக்கு துன்பம்.

போகிற போக்கில் அடுத்த தேர்தலுக்கு ஓட்டு போட வருவாரா என்பதே டவுட்டுதான்!

Read previous post:
ஊருக்கெல்லாம் வேற சம்பளம்! இவருக்கு மட்டும் தனி சம்பளம்!

Close