பெயர் சூட்டு விழாவா? பேசாம கூப்பிடலாம் இவங்களை!

திடீர் அட்ராக்ஷன் வந்து கருப்பிலேயே ஒரு மினுப்பாக திரிகிறார் ஒருவர்! அவர் வேறு யாருமல்ல, பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், மற்றும் நடிகர் என்ற பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ்தான்! ஹேர் ஸ்டைல் மாறி, முகத்தோற்றம் மாறி, முன்னெப்போதும் இல்லாத ரெமோவாக காட்சியளிக்கும் அருண்ராஜாவுக்கு அதிர்ஷ்டம் வந்ததெல்லாம் அந்த ‘நெருப்புடா’ பாடலால்தான். அவரே எழுதி, அவரே பாடியிருப்பதால், அவரையே அரை ‘கட் அவுட்’ ரஜினியாக்கி பார்க்க ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம்.

தனது கல்லூரித் தோழனும் உயிர் நண்பனுமாகிய சிவகார்த்திகேயனுக்காக அருண்ராஜா காமராஜ் வழங்கிய டைட்டில்தான் ரெமோ! “நாங்களும் மண்டைய பிய்ச்சுகிட்டு கிடந்தோம். பொருத்தமா ஒரு தலைப்பை சொல்லி, சந்தோஷப்படுத்திட்டான் நண்பன்”என்று இந்த புது ரெமோவுக்கு ஸ்பெஷல் மெமோ வாசிக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்திற்கு ஓராயிரம் பெயர் வைத்தும் திருப்தியடையாத நேரத்தில் திடீர் சர்ப்பரைஸ் கொடுத்த இந்த அருண்ராஜா மாதிரியே, அனிருத்தும் ஆகிவிட்டார்.

நயன்தாரா நடிக்கும் ஒரு திகில் படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார் அல்லவா? அந்த படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று மண்டையை குடைந்து கொண்டிருந்தாராம் டைரக்டர் தாஸ் ராமசாமி. அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக கை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

அவர் சொன்ன தலைப்பு டோரா! குழந்தைகள் உலகத்தில் டோராவுக்கு என்ன மரியாதை என்பது யாருக்கும் தெரியாததல்ல. இப்படியொரு தலைப்பை, ஒரு குழந்தை போலவே தோற்றம் கொண்ட அனிருத் சொன்னதில் வியப்பும் இல்லை.

ரெமோ, டோரா இவ்விரு தலைப்புமே கேட்ட மாத்திரத்தில் சட்டென்று பிடித்துப் போனதால், மேற்படி கிரியேட்டர்கள் இருவருக்கும் கோடம்பாக்கத்தில் நல்ல கரவொலி!

பேரு இவங்க வச்சுட்டாங்க, சோறு வைக்க வேண்டியது இனி டைரக்டர்களின் பொறுப்பு!

1 Comment
  1. Vijay says

    அருண்ராஜாவுக்கு அதிர்ஷ்டம் வந்ததெல்லாம் அந்த ‘நெருப்புடா’ பாடலால்தான்.. Thotta therikka therikka song nenga sollamatenganu theriyum because athu Vijay nadichathu.. nenga ajith ku mama velai pakurathu everyone know daa..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
En Appa – Actor Thambi Ramaiah Speaks About His Father

Close