ஜெய்க்காக மதம் மாறுகிறார் அஞ்சலி! அப்புறம்தான் டும் டும் டும்!
காதலுக்கு கண் இருக்கிறதோ இல்லையோ? காதலிப்பவர்களின் மீதுதான் சுற்றியிருப்பர்களின் கண் இருக்கும். அப்படி கவனித்து வந்த ஊர் கண்… உலகக் கண் எல்லாம் ஒரு வினாடி ஷாக் ஆகிக் கொண்டிருப்பது ஜெய் அஞ்சலி லவ்வை பார்த்துதான். ஏன்? ஜெய் வருங்கால மனைவிக்கு கொடுக்கிற மரியாதை அவர் இஷ்டமாக இருக்கலாம். அதற்காக அஞ்சலியை அஞ்சலி என்று அழைத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் அழைத்து, “இனிமேல் அவங்களை மேடம்னுதான் கூப்பிடணும். பேர் சொல்லி அழைக்கக் கூடாது” என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இதனால் இருவரும் இணைந்து நடிக்கும் ‘பலூன்’ பட யூனிட்டில் ஒரே முணுமுணுப்பு.
இதற்கிடையில் திருமணத்தை இந்த ஆண்டே வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்களாம். அதிலும் ஒரு சிக்கல். தெலுங்குப் பெண்ணான அஞ்சலியை இஸ்லாமியராக மாறச் சொல்கிறாராம் ஜெய். இவர் ஏற்கனவே இஸ்லாம் மதத்திற்கு மாறியது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
இதில் அஞ்சலிக்கு மறுப்பு இல்லை என்றாலும், சுற்றமும் சொந்தமும் முட்டுக்கட்டை போட்டு வருகிறதாம். மனமொத்த தம்பதிகள் மதமொத்த தம்பதிகளாகவும் மாறட்டுமே? அதில் என்ன பிரச்சனையாம்?
https://www.youtube.com/watch?v=uwJNkS0XAek&feature=youtu.be