தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க…! இன்னொரு விஜயகாந்த் ஆகிறாரா கமல்?

நாகரீகத்திலேயே பெரிய நாகரீகம் கிட்ட வர்ற ரசிகனை, நெட்டித் தள்ளாம இருக்கறதுதான்! இந்த உண்மையை தெரிந்து வைத்திருக்கும் நடிகர்கள் மட்டும் தங்களுக்கென பவுன்சர்கள் வைத்துக் கொள்கிறார்கள். தெரியாதவர்கள் கூட்டத்தின் இம்சை தாங்காமல் ரீயாக்ட் பண்ணுவதால் காலம் முழுக்க கெட்டப்பெயர்!

பொது இடங்களில் விஜயகாந்த் நடந்து கொண்ட அநாகரீகத்திற்குதான் தேர்தல் நேரத்தில் கவுத்துப் போட்டு கலாய்த்தார்கள் மக்கள். படு தோல்வியடைந்த கேப்டனின் கப்பல் இப்போது இலங்கை கடற்படையில் சிக்கிய ராமேஸ்வரம் படகு போலாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் அதுவாகவே மூழ்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த நேரத்தில்தான் விஜயகாந்தின் பாணியை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார் கமல்.

இன்னமும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாகவே இப்படியா என்கிற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது அவரது சமீபத்திய செயல். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் கமலை, ஆரத்தழுவ ஓடுகிறார் ஒரு ரசிகர். அவ்வளவுதான்… வெகுண்டெழும் கமல், அந்த ரசிகரை பிடித்து ஒரேயடியாக தள்ளுகிற அந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் படு வேகப் பாய்ச்சலுடன் பரவிக் கொண்டிருக்கிறது.

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் இதுபோன்ற இம்சைகளை பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். இதற்கே அலுத்துக் கொண்டால் மிச்ச சொச்ச காலத்தில் எக்கச்சக்க இம்சைதான் மிஸ்டர் உலகநாயகன்.

1 Comment
  1. Ram says

    Pls write valid stories. Don’t protlject fake news.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படம் எடுத்து முடிப்பதே இறைவன் செயல்தான்! போலீஸ் கதைக்குப்பின் கார்த்தி பெருமூச்சு

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் வினோத்...

Close