உங்க மனசாட்சி மீது மாட்டை விட்டுதான் முட்ட விடணும்!
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்திலிருந்துதான் அப்புக்குட்டியை உலகம் அறிந்தது. அதற்கப்புறம் மிக மிக தைரியமாக அவரை ஹீரோவாக நடிக்க வைத்தவர் சுசீந்திரன். அவர் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் அப்புக்குட்டிதான் ஹீரோ. “பாருய்யா… இந்த பையனுக்கு வந்த வாழ்வு” என்று சக காமெடியன்கள் கண்ணில் லிட்டர் லிட்டராக ஊற்றிய தருணம் அது. நம்பிக் கொடுத்த பொறுப்பை மிக அருமையாக பயன்படுத்தியிருந்தார் அப்புக்குட்டி.
அதற்கப்புறம் வீரம் படத்தில் நடித்ததன் காரணமாக அஜீத்தின் மனசில் தன் மொத்த வெயிட்டையும் ஏற்றி வைத்து உட்கார்ந்துவிட்டார் அப்புக்குட்டி. இவரது ஒரிஜனல் பெயரான சிவபாலன் என்ற பெயரையே மீண்டும் அவருக்கு வைத்த அஜீத், “இனிமே உங்களை இந்த உலகம் இப்படிதான் கூப்பிடணும்” என்றெல்லாம் சொல்லி பெருமை படுத்தினார். அதோடு விட்டாரா? தன் விலை உயர்ந்த கேமிராவால் இவரை படம் பிடித்து, அதை பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார்.
இப்படி வரலாற்றில் இடம் பிடித்த அப்புக்குட்டிக்கு, என்ன கேடுகாலமோ தெரியவில்லை. இப்படியொரு காட்சியில் நடித்திருக்கிறார். அவரது பருத்த தொப்பையும், மீசையில்லாத மேல் உதடும், இந்தாளுக்கு எதுக்குய்யா இந்த வேலை? என்று இந்த புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில் ஆத்திரப்பட வைக்கிறது. படத்தின் பெயர் காகித கப்பல்.
இப்படியொரு துணிச்சலான காட்சியை எடுக்கத்துணிந்த இந்த டைரக்டர் யாருடைய சிஷ்யரோ? மொத்த சாபமும் அவரது குருநாதருக்கும் போய் சேரட்டும். இருந்தாலும் உங்க தன்னம்பிக்கையில அலங்காநல்லூர் காளையை விட்டுதான் முட்ட விடணும்! கண்றாவி கண்றாவி….