அஜீத் போனாலென்ன? ஏ.எம்.ரத்னம் குட்புக்கில் காமெடி சூப்பர் ஸ்டார்

நலிந்த தயாரிப்பாளருக்கு உதவினால் பண ஸ்தானம் வலுவடையும் என்ற சோதிட நம்பிக்கையின் அடிப்படையில், எங்கேயோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்து அவரை வாழ வைத்தார் அஜீத். லாப ஸ்தானம் வேறு கட்டத்திற்கு போகும் போது, ரத்னத்தை மாற்றிவிட்டு, சத்யஜோதிக்கு வந்தார் அவர். என்னதான் சோதிடம், ஜாதகம் என்றாலும், அஜீத்தின் பிரிவு ரத்னத்திற்கு நஷ்டம்தான்.

வளர்ந்த கொடிக்கு படர்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? அஜீத் போனாலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை துவங்குகிற திட்டத்திலிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். அதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி.

தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் வெற்றிப்பட ஹீரோவாக ஆகிவிட்ட சந்தானம், இனிமேல் பெரிய பேனர் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதன் விளைவாக அஜீத்தை வைத்து படம் எடுத்த ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு கால்ஷீட் கொடுப்போமே என்று நினைத்தவர், அவரை தொடர்பு கொள்ள, கொம்புத் தேன் கொரியர் பார்சலில் வந்தது போல ஆனந்தக் கூத்தாடுகிறார் ரத்னம்.

சந்தானத்தின் இந்த முடிவை தொடர்ந்து லைக்கா மாதிரியான பெரிய நிறுவனங்களும் சந்தானத்தை அணுகியிருக்கிறார்களாம். இனி நோ காமெடி. ஒன்லி ஹீரோதான் என்று கூறிவந்த சந்தானத்தின் தில்லுக்கு கிடைத்த வெற்றிதான் இதெல்லாம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உங்க மனசாட்சி மீது மாட்டை விட்டுதான் முட்ட விடணும்!

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்திலிருந்துதான் அப்புக்குட்டியை உலகம் அறிந்தது. அதற்கப்புறம் மிக மிக தைரியமாக அவரை ஹீரோவாக நடிக்க வைத்தவர் சுசீந்திரன். அவர் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில்...

Close