அரவிந்த்சாமியை வளைத்த துருவங்கள் பதினாறு
தமிழ்சினிமாவின் இளம் மணிரத்னம் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் கார்த்திக் நரேனை. இவர் துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். வெறும் மூன்று கோடியில் தயாரான படம் ஏழு கோடியை தாண்டி வசூல் செய்ததாக இன்டஸ்ட்ரியில் பேச்சு. அதைவிட படத்தின் மேக்கிங் தமிழின் முன்னணி ஹீரோக்களை, “யார்றா அந்த கார்த்திக் நரேன்?” என்று தேட வைத்தது தனி.
இதையடுத்து அவரை தேடி வரவழைத்து கதை கேட்க ஆரம்பித்த ஹீரோக்கள், நான் நீ என்று போட்டி போட்டு கால்ஷீட் தர தயாராக இருந்தார்களாம். இருந்தாலும் நரேனின் மனிசில் யாரு என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்தது. சிலர் விஜய் சேதுபதிதான் கார்த்திக் நரேனின் அடுத்த ஹீரோ என்றெல்லாம் கொளுத்திப் போட ஆரம்பித்தார்கள்.
ஆனால் நரேனின் மனசில் இருந்தது அரவிந்த்சாமிதான். இவரது இரண்டாவது படத்தின் கதைக்கு பொறுத்தமாக அவர்தான் இருப்பார் என்று நம்பிய கார்த்திக் நரேன், நம்ம சிவப்பு மனிதனை அணுக, பச்சை கம்பள வரவேற்பு கிடைத்ததாம் அங்கே.
கடைசியில் கை நிறைய பாராட்டுகளோடும், மனசு நிறைய சம்மதத்தோடும் வந்து சேர்ந்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
புத்திசாலி டைரக்டரா இருந்தால், புல்டவுசரையும் வெறும் விரலால் நகர்த்திவிடலாம். அப்படிதானே நரேன்?
https://youtu.be/Fa80M2bCDvw