பஞ்சாப்பில் படப்பிடிப்பு – விஜய்யை ‘ சிங்’ ஆக்குகிறார் அட்லீ
அட்லீ மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் விஜய். பொதுவாகவே கெட்டப் சேஞ்ச் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை அவர். ஆனால் அட்லீ படத்தில் மட்டும் சின்ன சின்ன சேஞ்ச் செய்து விளையாடுவது அவருக்கு பிடிக்கும். அந்த வகையில் விஜய் எடுக்கப் போகும் புதிய அவதாரம் சிங்.
கடந்த சில வாரங்களாகவே தாடி மீசையுடன் காணப்படும் விஜய், அவ்வளவு களேபரத்திலும் தன் கெட்டப்பை மறைத்துக் கொண்டுதான் மாணவர் போராட்டத்திற்கு வந்திருந்தார். அப்படியிருந்தும் அவரது வித்தியாசமான போஸ், ரசிகர்களின் கண்களுக்கு செம விருந்தளித்துவிட்டது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய விஜய் கெட்டப், பல்வேறு விவாதங்களை கிளம்பியும் விட்டது.
அட்லீ படத்தில் அவர் மதுரை இளைஞராகவும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அதற்காகதான் இந்த கெட்டப் என்று செய்திகள் கசிந்தாலும், நிஜம் அதுவல்ல. நமக்கு கிடைத்த சோர்ஸ்படி, அவர் பஞ்சாப் இளைஞராக ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். பொற்கோவில் பின்னணியில் சில காட்சிகளையும் யோசித்து வைத்திருக்கிறார் அட்லீ. அங்கு முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த முன் அனுமதி வேண்டி, அட்லீயின் மேனேஜர்கள் பஞ்சாபை வட்டமிட்டு வருகிறார்கள். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்.
https://youtu.be/iFQ-8K_OHME